தேடல்

Tuesday 10 March 2015

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நம்ம ஊரு MLA..!!


    கீழக்கரை 10.03.2015
          இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜனாப் ஜவாஹிருல்லாஹ் M.B.A.,M.phil,.Phd அவர்கள் சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து பலசமுக பணிக்கும் குறிப்பாக (கல்விக்கு) கல்விநிறுவனங்களுக்கு நிதிவழங்கி வருகிறார்கள்.

      இது குறித்து கீழக்கரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நகர் தலைவர்  சிராஜுதீன் அவர்களிடம் கேட்டபோது.சட்டமன்ற உறுப்பினர் ஜனாப் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தமிழக அரசு அவர்களுக்கு வழங்கிய தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து அணைத்து சமுதாய மக்களும் பயன் பெரும் வகையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பள்ளிக்கூடங்களுக்கு நிதி வழங்கி வருகிறார்கள் .இதன் அடிப்படையில் கீழக்கரை இஸ்லாமிய துவக்கப்பள்ளிக்கு வகுப்பறை கட்ட ரூபாய்  ஐந்து லட்சமும்,திருப்புல்லாணி ஒன்றிய மேதலோடை நாடார் மகாஜன சங்கம் உயர்நிலை பள்ளிக்கு அறிவியல் ஆராய்ச்சி கூடம் கட்டுவதற்கு ரூபாய் பன்னிரண்டு லட்சமும் ,கீழக்கரை மக்தூமிய உயர்நிலைப்பள்ளிக்கு வகுப்பறை கட்ட ரூபாய் பதினைந்து லட்சமும்,  தற்போது கைராத்துல்   ஜலாலியா தொடக்கப்பள்ளிக்கு ரூபாய் ஐந்தரை லட்சமும் வழங்கியுள்ளார்கள்.


இது மட்டுமல்லாமல் இராமநாதபுரம் மாவட்டம் தாமரைகுளம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் அறிவியல் ஆய்வககூடம் ,திணைக்குளம் அரசு உயர்நிலைபள்ளிக்கு சுற்றுச்சுவர் ,மற்றும் கீழக்கரை மாயாகுளம் அரசு பள்ளிக்கு நிதி உதவி இது போன்ற தனக்கு அரசு வழங்கிய தொகுதி மேம்பாடு நிதியை சரியான பாதையில் 
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அடுத்த தலைமுறையினரை படித்தவர்களாக மாற்றுவதோடு இல்லாமல் நமது மாவட்டத்தை அனைவரும் படித்த மாவட்டமாக மாற்றப்படவேண்டும் என்று முனைப்போடு செயல் படும் 
நம்ம ஊரு M.L.A வை வாருங்கள் நாமும் வாழ்த்துவோம்.

                (என்றும் மக்கள் நலப்பனியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
                                           (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!)

1 comment:

  1. HE IS ONE & ONLY MLA AMONG TAMIL NADU MLAS. GEM OF HUMAN BEINGS. சமீபத்தில் கீழக்கரை மஹ்தூமியா மேல் நிலை பள்ளியில் அவரது தொகுதி நிதியால் கட்டப்பட்ட விரிவாக்க பள்ளிக் கட்டிட திறப்பு விழாவுக்கு வருகை தந்திருந்தார். அப்போது தொகுதி நிதியிலிருந்து ஜாதி மதப் பேதமின்றி குறிப்பாக கல்வி ஸ்தாபனங்களுக்கு செய்த உதவிகள பட்டியலிட்டார்.அனைத்தும் அப்பழுக்கற்ற உண்மை. அவைகளை அவரது வளைத் தளத்திலும் ஆதாரத்துடன் வெளி இட்டும் உள்ளார்.
    அவ்வமையம் மேலே கண்ட ஆங்கில வார்த்தைகளை சமர்பித்தேன். அத்துடன் எனது ஆதங்கத்தையும் வெளிப் படுத்தினேன்.இதுவரை சுமார் 8 கோடி ரூபாய் தொகுதி நிதியாக வந்ததில் இராம்நாதபுரம் தொகுதி முழுவதும் இவ்வளவு ஒதுக்கீடு செய்து கொடுத்த வாக்கை காப்பாற்றி உள்ளீர்கள். ஆனால் ஏறத்தாழ இதே காலக் கட்டத்தில் கீழக்கரை நரகாட்சி (?)க்கு 20 கோடிக்கு மேல் மக்கள் நலப் பணிக்காக மக்களின் வரிப் பணத்திலிருந்து நிதி ஆதாரம் கிடைத்தும் கீழக்கரையின் நிலையை கண்டீர்களா என்றேன். வேதனையான புன்முறுவல் தான் அவரது பதிலாக வெளிப் பட்டது.

    ReplyDelete


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.