தேடல்

Monday 30 March 2015

கீழக்கரையில் அம்மா மருத்துவ காப்பிட்டு திட்டம் முகாம் .!

கீழக்கரை: 30.03.2015

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அரசு மருத்துவமனையில் செயல்பட்டுவரும், அம்மா மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம் நாளை  1.04.2015 (புதன்கிழமை) அன்று கீழக்கரை உசைனியா கல்யாண மஹாலில் நடைபெறுவதால் இம்மருத்துவமுகாமை பற்றி கீழக்கரை அரசு மருத்துவர் திரு.ராஜ் மோகன், ஜனாப்.ஜவாஹிர் ஹுசைன் அவர்களிடம் கேட்டபோது.

இருதயநோய்:
குழந்தைகளுக்கு ஏற்படும் இருதயநோய், பெரியவர்களுக்கு ஏற்படும் இருதய மாரடைப்பு ஆகிய நோய்களைகண்டறிய ECHO,ஆஞ்சியோகிராம் போன்ற பரிசோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, இருதயநோய்க்கான அறுவை சிகிச்சை மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி பைபாஸ் ஆபரேசன் ஆகியவற்றிக்கு உடனடியாக இம்முகாமிலிருந்து பரிந்துரைசெய்யப்படும்.



கர்ப்பப்பைநோய்:
 கர்ப்பப்பைகட்டி, கர்ப்பப்பைஇறக்கம் போன்ற கர்ப்பப்பை சம்மந்தமான அனைத்து வியாதிகளுக்கும் அறுவைசிகிச்சை செய்ய கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்படும்

குடலிறக்கம்:
குடலடைப்பு போன்ற நோய்களுக்கு அறுவைசிகிச்சை செய்ய கீழக்கரை அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்படும்.
மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறிவதற்கு இம்முகாமிலிருந்து உடனடியாக பரிந்துரைசெய்யப்படும்.

மார்பக புற்றுநோய் கண்டறியும் (Mamogram) ஸ்கேன்கள் எடுக்கவும், இம்முகாமிலிருந்து உடனடியாக பரிந்துரைசெய்யப்படும்.

புற்றுநோய் சம்மந்தமான பெரிய அறுவைசிகிச்சைகள் கதிரியக்கசிகிச்சை முறையில் செய்ய இம்முகாமிலிருந்து உடனடியாக பரிந்துரைசெய்யப்படும்.
பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும், ஆஸ்துமா, நிமோனியா, சளி போன்றவற்றிக்கு இம்முகாமிலிருந்து உடனடியாக பரிந்துரைசெய்யப்படும்.
இம்மருத்துவமுகாமில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரத்தகொதிப்பு மற்றும் சர்க்கரை அளவு ஆகியவைகள் பரிசோதனை செய்யப்பட்டு கட்டுப்படாத சர்க்கரைவியாதிகளுக்கு கீழக்கரை அரசு மருத்துவமனையில் உள்நோயளியாக அம்மா வார்டில் அனுமதிக்கப்பட்டு உரியசிகிச்சைகள் வழங்கப்படும்.

மஞ்சள்காமாலை நோய்க்கு அனைத்து பரிசோதனைகளும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டு உள்நோயளியாக அம்மா வார்டில் அனுமதிக்கப்பட்டு உரியசிகிச்சைகள் வழங்கப்படும்.
இம்ருத்துவமுகாமில் MRI,CT போன்ற ஸ்கேன்கள் எடுக்க பரிந்துரை செய்யப்படும்.



இம்மருத்துவ முகாமிற்கு வரும் பொதுமக்கள் குடும்பஅட்டை மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டை கொண்டுவந்து பயன்பெற்று கொள்ளலாம் என்று கூறினார்கள்.
               (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
                                      (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)

Saturday 28 March 2015

வபாத் அறிவிப்பு..!


கீழக்கரை:29/03/2014



வடக்குத்தெரு ஜமாத்தை சேர்ந்த மர்ஹும்.அமீர்முகைதீன் அவர்கள் மகனும் 
ஜின்னா,அமானுல்லா,பசீர்(அம்பா) ஆகியோர்களின் சகோதரரரும்.சாகுல் ஹமீது,தாஜுதீன்,ஆகியோரது மாமாவும்.ஜகுபர் சாதிக் (மாப்பிள்ளை,பெண் திருமண ஏற்பாட்டாளர்) அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.  (இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்)

செய்தி உதவி:A.அப்துல் ஹமீது(செல்லவப்பா)



Friday 27 March 2015

பராமரிப்பின்றி கீழக்கரை நீரேற்று நிலையம் ...!!

கீழக்கரை:26.03.2015
 வடக்குதெரு ஜமாஅத் நிர்வாக சபைக்கு சொந்தமான மணல் மேட்டில் பின்புறம்  50 சென்ட் 287 கோல் அளவுள்ள இடம் தற்போதைய மதிப்பு  (ரூபாய் 3  மூன்று கோடி )கீழக்கரை மக்களின் குடிநீர் தேவையை போக்க மேல்நிலை குடிநீரேற்ற தொட்டி கட்டுவதற்கு  அப்போதைய பஞ்சாயத்  கீழக்கரை நகராட்சிக்கு வடக்குதெரு ஜமாத்தால் இலவசமாக வழங்கப்பட்டது.





 இப்போது காவேரி கூட்டு  குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வடிகால் வாரியம் கீழக்கரை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது.ஆனால் நீரேற்று நிலையம் பராமரிப்பில்லாமல் கிடக்கிறது.


இது குறித்து அதை சுற்றி வசிக்கும் பெண்களிடம் கேட்டபோது .இந்த நீரேற்று நிலையம் சுமார் 40 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வருகிறது . ஆனால் இங்கே பராமரிப்பில்லாமல் கேப்பாடற்று கிடக்கிறது.

15 நாட்களுக்கு ஒருமுறை மேல்நிலை தொட்டியை சுத்தம் செய்யவேண்டும்

 நீரேற்று நிலையத்தை சுற்றி சுற்று சுவர் இல்லாமல் யார் வேண்டுமானலும் சென்று வரலாம் என்றாகி விட்டது . சிலநேரங்களில் இரவு 7 மணிக்கு மேல் சில சமுக விரோதிகள் இதன் உள்ளே சென்று மது அருந்துவதும்.சூதாட்டம் நடத்துவதும்.


      மற்றும் கஞ்சா, போதை வஸ்துகளும் இங்கே உபோயோகிக்கிரார்கள். சிலபேர் நீரேற்று தொட்டியின் மேல ஏறி மது அருந்துகிறார்கள் .இதன் படிக்கட்டுகளும் சேதமடைந்து கிடக்கிறது.இதில் யாரும்  ஏறி தவறி விழுந்தால் இறக்க நேரிடும்.  இவர்களை தட்டிக்கேட்டால் .இது உன் இடமா உன் வேலையை பாரு என்று எங்களையே அதட்டுகிறார்கள் நாங்கள் பெண்களாக இருந்து என்ன  செய்வோம்.


  இதற்க்கு கீழக்கரை நகராட்சிதான் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். வரும் முன் காக்கவேண்டும் வந்த பின்பு காப்பாற்றி வேலை இல்லை. என்று அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் கூறினார்கள் 

  (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
             (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக .....!!)







   
  

Thursday 26 March 2015

கீழக்கரையில் H.D.F.C வங்கி திறப்பு...!


கீழக்கரை:27/03/2015

கீழக்கரை தபால் அலுவலகம் ரோடு (POST OFFICE ROAD) கிழக்கு தெரு செல்லும் பாதையில், இன்று H.D.F.C வங்கி திறக்கப்பட்டுள்ளது.


இந்த வங்கியை கட்டிடத்தின் உரிமையாளர்,ஜனாப்.அலாவுதீன் (டங் டங்) அவர்களால் திறந்து வைக்கபட்டது,சிறப்பு விருந்தினராக மதுரை H.D.F.C வங்கியின் துணை தலைவர் திரு.C.V.ஹரி கலந்து கொண்டார்.


இது குறித்து  அந்த வங்கியின் மேலாளர் திரு நடராஜ் குமார் அவர்கள் கூறும் போது எங்களது வங்கி இந்தியாவில் 6000 க்கு  மேலாக உள்ளது தற்போது வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கீழக்கரையில் திறக்கப்பட்டுள்ளது . 


இதில் விவாசாயகடன்,நகைகடன், இருசக்கர வாகன கடன் ,புதிய வீட்டுகடன்,இதுமட்டுமல்லாது நகரத்தில் என்னென்ன முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதோ அதேபோல கீழக்கரை கிளைக்கும் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 
மேலும் விபரங்களுக்கு கிளை மேலாளர் நடராஜ் குமார்.தொலைபேசி என்:98941 423 57.

    (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
            சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!

கரடு முரடான சாலை கண்டுகொள்ளாத நகராட்சி ..!!

கீழக்கரை 26.03.2015
  கீழக்கரையின் இரண்டாவது பெரிய சாலை சேகு அப்பா சாலை இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கான வாகனங்கள் செல்கின்றன.இந்த சாலையில் தனியார் மருத்துவமனைகளும், கிறிஸ்துவர்கள் வழிபடும் சர்ச்,உள்ளது.


ஆனால் இந்த சாலை கரடு முரடாகவும் குண்டும் குளியுமாகவும் காட்சி அளிக்கிறது. இது குறித்து மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் திரு வினோத் அவர்களிடம் கேட்டபோது  இந்த சாலையில் அனைத்து பள்ளி வாகனங்களும்,மட்டுமல்லாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களும் இந்த சாலையில் செல்கிறார்கள்.

இந்த சாலையில் ஆங்காங்கே சாக்கடை நீர் கட்டுவதால் அங்கு வசிக்கும் மக்கள் வீடு உடைத்த கற்களை (ரப்பீஸ்) கொட்டி ரோட்டை நாசப்படுத்துகிரர்கள் இதை கீழக்கரை நகராட்சியும் கண்டுகொள்வதில்லை 
.

இந்த குறைகளை சுற்றிக்காட்டி அரசியல் கட்சிகள்  நகராட்சியை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது.  உடனே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார் .

        (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
                      (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!! )

Wednesday 25 March 2015

கீழக்கரை அருகே வாகன விபத்து ..!

கீழக்கரை 25.03.2015
        கீழக்கரை அருகே முனிஸ்வரன் கோவில் சாலையின் வளைவில் கீழக்கரையிருந்து ராமநாதபுரம் சென்ற இருசக்கர வாகனமும் அதேபோலே  ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை நோக்கி வந்த மற்றொரு பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் வாகனத்தில் வந்தவர்கள் காயமடைந்தனர் இதில் ஒருவரை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கும் மற்ற இருவரும் பலத்த காயமடைந்ததால் ராமநாதபுரம் அரசுமருத்துவமனைக்கும் சேர்க்கப்பட்டனர் .



கீழக்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இந்த மூவரும் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது .வடக்குதெருவை சேர்ந்த ஜலால் மற்றொருவர்  கிழக்குதெரு அப்சர் , கிழக்குதெரு பட்டனி அப்பா பகுதியை சேர்ந்த மீராசாகிபு  எனத் தெரிந்தது.மீராசாகிபு என்பவர் பலத்த காயமடைந்ததால் மதுரை கொண்டு சென்றுள்ளனர்.

Tuesday 24 March 2015

கீழக்கரை வீட்டில் தீ முக்கிய ஆவணங்கள் கருகியது ..!!

கீழக்கரை
       கீழக்கரை புதுகிழக்கு தெரு பட்டானியப்பா தர்கா அருகே வீட்டில் குடியிருக்கும் ஹபீப் (இவர் பொது சேவையில் ஈடுபாடு உள்ளவர்) நேற்று பகல் மூன்று மணியளவில் வீட்டில் தூங்கிகொண்டு இருக்கும் போது வீட்டின் மாடியில் குடிசையில் புகை வருவதை பார்த்த அருகில் உள்ளவர்கள்  ஹபீப் இடம் உடனே தகவல் சொன்னனர்.



உடனே ஹபீப் மற்றும் அருகில் உள்ளவர்களும் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர் அதற்குள் குடிசை மற்றும் அதிலிருந்த முக்கிய ஆவணங்களும் பாஸ்போர்ட்,  குடும்பஅட்டை,


மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகின இதனை அடுத்து கீழக்கரை காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு கீழக்கரை துணை ஆய்வாளர் திரு முனியாண்டி அவர்கள் விசாரித்து வருகிறார்கள் .

     

            (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
                                         சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!! 

பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பாதை இல்லாமல் பரிதவிக்கும் அவலம்..?

கீழக்கரை:24.03.2015

கீழக்கரை இரண்டாவது பெரிய சாலையாக மக்கள் போக்குவரத்துக்கு
 பயன்படுத்துவது வடக்குதெரு தெருவில் உள்ள சேகு அப்பா தர்கா சாலை இதில் தினந்தோறும்  நூறுக்கணக்கான இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகிறது.

ஆனால் சமீபக காலமாக கீழக்கரை நகர் முழுவதும் தன்னிர்குழாய் பதித்து வருகிறார்கள் இது குறித்து அந்த சாலையில் புஹாரி கோழிக்கறி கடை நடத்திவரும் நவாஸ் அவர்களிடம் கேட்டபோது இந்த ரோடு அதிக போக்குவரத்து செல்லும் பாதையாக விளங்குகிறது.


கடந்த ஐந்து  வருடங்களுக்கு முன்பாக சிமன்டினால் சாலை போடப்பட்டது
இந்த சாலையின் வழியே..பள்ளி செல்லூம் குழந்தைகள் சென்று வருகின்றனர்,ஆனால் தற்போது கீழக்கரை நகராட்சியோ...! தண்ணிர் குழாய் பதிக்கிறோம்.என்ற பெயரில் நல்ல இருக்கும் ரோட்டைபால் படுத்துவதுடன் தண்ணீர் குழாய் வருவதற்கு முன்பாகவே ரோட்டை  தோண்டி நன்றாக  இருக்கும் சாலையை சீரழித்துவிட்டு சரி செய்யாமல் கிடப்பில் போட்டு விடுகிறார்கள்.இதனால் பள்ளிசெல்லும் மாணவ -மாணவிகள் சரியான நேரத்திற்கு பள்ளி செல்ல முடியாமல்  அவதிபடுகிறார்கள்



உடனே நகராட்சிஇந்த சாலையை சீரமைக்கவேண்டும் ,என்று கூறினார்.

(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
             (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)

Monday 23 March 2015

கீழக்கரையில் மனிதனை கொல்லும் ரசாயன இனிப்பு ..!! அதிகம் பகிருங்கள்

கீழக்கரை: 23.03.2015
       
 ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வெகு வேகமாக பரவிவருகிறது. இது நமதூர் கீழக்கரையிலும் இந்த வேதிப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இனிப்பு பவுடர் .அதாவது மேல உள்ள படத்தில் நீங்கள் காண்பது. கோல்ட் மோகர் இதனுடைய பயன்பாடு  கனரகதொழிற்ச்சாலைகளில் பயன்படுத்தப்படும்  எந்திரங்களை சுத்தம் செய்யும் ஒரு வேதிப்பொருள்.


ஆனால் இதை அறியாத மக்கள் தற்போது சக்கரை (சீனி) பதிலாக இதை பயன்படுத்துகிறார்கள் என்றால் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.நமதூர் மக்கள்  இதை கடைகளில்.ரோஸ் மில்க் பவுடர் என கேட்டு வாங்கி சென்று. சர்பத்,ரோஸ்மில்க், ஐஸ் கிரீம், பேக்கரி, மிட்டாய் .போன்றவற்றில் கலந்து.கடைகளில்  விற்பனை செய்கிறார்கள்.  (100 gm அளவுள்ள இந்த வேதிப்பொருள் 1 ஒரு கிலோ சீனி சக்கரைக்கு நிகரானது)



   இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் ஊடக பிரிவு ஆலோசகர் ஜனாப் சாலிஹ் ஹுசைன் அவர்கள் மருத்துவர்களிடம்  கேட்ட போது .இந்த வேதிப்பொருளானது. உண்பதற்கு உகந்ததல்ல என்று அதில் எழுதபட்டிருக்கிறது. இதை மக்கள் கண்டுகொள்வதே இல்லை. இதை உபயோகித்தால்.குடல் உபாதைகள் ஏற்படுவதுடன், குடல் புற்றுநோய் வரும் என்று கூறினார்.
  அன்பார்ந்த வியாபாரிகளே இந்த வேதிப்பொருள் கேட்டு வரும் வாடிக்கையாளர்களிடம் இதனுடைய பயன்பாட்டை எடுத்துக்கூறுங்கள். இதனுடைய வீரியத்தை எடுத்து சொல்லி அடுத்த தலைமுறை நோயற்ற தலைமுறையாக மாற்ற நாம் பாடுபடுவோம்.


   (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
           (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)
  அதிகம் பகிருங்கள் உங்களுடைய ஒரு பகிர்வு நமதூர் மக்களை  காப்பாற்றும் 

Sunday 22 March 2015

முகைதீனியா பள்ளி மாணவிகள் சாதனை..!!

கீழக்கரை: 22.03.2015
                   கீழக்கரை கிருஷ்ணா சேவா டிரஸ்ட் நடத்திய கல்விதிருவிழா சென்ற மாதம் நடந்தது . இதில் கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சேர்த்து சுமார் 800 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


இந்த போட்டி பல வகையில் நடத்தப்பட்டது திருக்குறள்,ஒப்புவித்தல் ,ஓவியம் ,கட்டுரை போன்ற பல பிரிவுகளில் நடத்தப்பட்டது .இப்போட்டியில் முகைதீனிய பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.அதன் தொடர்ச்சியாக இன்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் நான்காம் வகுப்பில் படிக்கும் திலோ என்ற மாணவி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசையும் ,மற்றும் மற்ற மாணவிகள் கட்டுரை ,ஓவியம் போன்ற போட்டிகளில் இரண்டாம் பரிசையும் இப்பள்ளி மாணவிகள் பெற்றனர்.



இப்போட்டியை நடத்திய கிருஷ்ணா சேவா டிரஸ்ட் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்  வழங்கப்பட்டது .

(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!! 

Friday 20 March 2015

கீழக்கரையில் இரவில் மருத்துவர்கள் இல்லாமல் பரிதவிக்கும் பொதுமக்கள்..!!

கீழக்கரை 21.03.2015
   நமதூர் கீழக்கரையின் வளர்ச்சி முன்பைவிட பெரும் வளர்சிகண்டுள்ளது. காரணம்.முன்பு இருந்த பஞ்சாயத் இப்போது இல்லை தற்போது இரண்டாம் நிலை நகராட்சி அந்தஸ்து .இனி தாலுகா அலுவலகம் செல்ல ராமநாதபுரம் செல்லவேண்டாம் .கீழக்கரையே தாலுகா அறிவிப்பு செய்தாகிவிட்டது.குட்டி சிங்கப்பூர் ஜப்பான் ,என்று சொல்வதற்கு மாட மாளிகைகள் தோன்றிவிட்டது.தெருவெங்கும் துரித உணவகங்கள், அதிகமான தனியார் மருத்துவமனைகள் ,போன்ற  எத்தனையோ மாற்றங்கள் வந்துவிட்டது,வித விதமான நோய்களும் வந்துகொண்டிருக்கிறது.

 இத்தனை மாற்றங்கள் வந்த நமதூருக்கு மருத்துவம் என்பது இன்னும் கேள்விக்குறியாகதான் உள்ளது .எந்த ஒரு  நோய்கள் ஏற்ப்பட்டாலும் அருகில் உள்ள ராமநாதபுரத்திற்கு செல்லவேண்டும்.என்ற கட்டாயத்தில் உள்ளோம்.

இது ஒருபுறமிருக்க.இரவில் யாருக்காவது உடல்சுகவீனம் ஏற்பட்டால் அவர்கள் இறப்பது தவிர வேற வழியில்லை .காரணம் இரவில் எந்த ஒரு மருத்துவரும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவம் சிகிழ்ச்சை அளிக்க முன்வருவதில்லை.இது நமதூருக்கு ஒரு சாபக்கேடு.இது குறித்து தெற்குதெருவில் வசிக்கும் பாதுஷா அவர்களிடம் கேட்டபோது இரண்டு தினங்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவருக்கு இரவில் நெஞ்சுவலி என  எனக்கு தெரிந்து.

 உடனே அருகில் உள்ள மருத்துவரை அழைத்ததற்கு.அவர் இரவில் வரவில்லை.உடனே பாதிக்கப்பட்ட எனது நண்பரை வாகனத்தில் தூக்கிகொண்டு அருகில் உள்ள மற்றொரு மருத்துவரை கானசென்றோம்.அவரும் அவருடைய மருத்துவமனை பூட்டி திறக்கவேயில்லை நீண்ட நேரம் கதவை தட்டி பார்த்து திறக்காதால்.கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொன்று சென்றோம்.அங்கு செல்லும் போது இரவு  மணி 1.30 இருக்கும்.ஆனால் அங்கேயும் மருத்துவர் இல்லை .உடனே  அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவரும் முக்கால் மணிநேரம் கழித்து வந்தார்.அவர் வந்து பார்த்தபோது  என் நண்பர் ஏற்கனவே இறந்து விட்டதாக சொன்னார்.


இறைவன் படைத்த இந்த உயிர் விலைமதிப்பற்றது.ஆனால் இந்த உயிரோடு இந்த மருத்துவர்கள் விளையாடுகிறார்கள்.சரியான நேரத்தில் மருத்துவர்கள் என் நண்பருக்கு  சிகிச்சை அளித்திருந்தால் அவரை  காப்பற்றி இருக்கலாம் .இன்று எனது நண்பருக்கு நாளை எனக்குகூட இந்த நிலைமை ஏற்படலாம்.மருத்துவம் படித்த மருத்துவர்களுக்கு மனிதநேயம் எங்கே சென்றது . மனிதநேயத்தை கற்றுக்கொண்டு  பிறகு மருத்துவம் செய்யலாம்.என்று  அவர் கூறினார்.


(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!

அதிகம் பகிருங்கள் உங்களுடைய ஒரு பகிர்வு அடுத்தவர்கள்  உயிரை காப்பாற்றுவதாக இருக்கட்டும் 

Thursday 19 March 2015

கீழக்கரையில் பெண்கள் தொழுகை பள்ளி திறப்பு ...!!

கீழக்கரை.19.03.2015
          சீதக்காதி அறக்கட்டளையின் சார்பில் நமதூருக்கு மட்டுமல்லாமல் அணைத்து ஊர்களுக்கும்,அணைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் பல நல்ல பணிகளை இவ் அறக்கட்டளை செய்து வருகிறது.


இதன் பணிகளை தொடர்ந்து பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மறைந்த வள்ளல் B.S.A.அப்துல் ரஹ்மான் சாஹிப் அவர்களின் மகன் B.S.A ,ஆரிப் புகாரி ரஹ்மான் அவர்கள்  தன சொந்த செலவில் தாசிம் பீவி அப்துல் காதிர் மகளிர் கல்லூரி வளாகத்திற்குள் பெண்கள் தொழுகை பள்ளியை கட்டி தந்துள்ளார்கள் .




கடந்த 16.03.2015.அன்று பள்ளி திறக்கப்பட்டது .அந்த பெண்கள் தொழுகை பள்ளிக்கு தனது தகப்பனார் மறைந்த B.S.A.அப்துல் ரஹ்மான் பெயரை வைத்துள்ளார்கள்.இவர்களின் இந்த பனி மென் மேலும் சிறந்து விளங்க வாருங்கள் நாமும் வாழ்த்துவோம் ...!!!

(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)

Wednesday 18 March 2015

வபாத் அறிவுப்பு..!


கீழக்கரை : 19/03/2015



கீழக்கரை தெற்க்குத்தெரு ஜமாத்தை சார்ந்த மர்ஹூம் M.S.M.செய்யது முஹம்மது அவர்களின் மகனும்,ஹாரிஸ்,சுபைர்,தாரிக் ஆகியோர்களின் சகோதரரும் இராமநாதபுரம் பரிதாஸ் ஸ்டோர்ஸ் உரிமையாளர்களின் ஒருவரான முஹம்மது ஹாரூன் அவர்கள் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் வபாத்தாகிவிட்டர்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவுன்) அண்ணாரின் ஜனாஸா நல்லடக்கம்  பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரை இழந்த வாடும் அக்குடும்பத்திற்கு 
கீழக்கரை நகர் நல இயக்கம் தன் ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

செய்தி உதவி: முசம்மில் ஹுசைன் (தெற்க்குத்தெரு).

Tuesday 17 March 2015

கீழக்கரையில் மக்கள் சங்கமம் மாநாடு அலுவலகம் திறப்புவிழா..!!


கீழக்கரை 18.03.2015
          கீழக்கரை பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்திய நடத்தும் மக்கள் சங்கமம் மாநாடு வரும் ஏப்ரல் 25,26. தேதிகளில் நடத்தவிருக்கின்றது.இதற்க்கான அலுவலக திறப்புவிழா நடைபெற்றது.

.
மக்கள் சங்கமம் மாநாட்டின் அலுவலகத்தை கீழக்கரை வழக்கறிஞர் ஜனாப் ஹமீது சுல்தான் ,அவர்கள்  திறந்து வைத்தார்கள் மற்றும் இந்த மாநாட்டு குழு தலைவராக ஜனாப் அப்துல் காதர் தேர்வு செய்யப்பட்டார்.இன் நிகழ்ச்சிக்கு கீழக்கரை ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஜனாப் செய்யது இபுராஹீம் முன்னிலை வகித்தார்கள்
.

வரவேற்புரை  அபூபக்கர் சித்திக் மாநாட்டு குழு செயலாளர் ,சிறப்புரை ,இஸ்ஹாக் மேற்கு மாவட்ட தலைவர் (SDPI) அப்பாஸ் அலி கிழக்கு மாவட்ட தலைவர் ,அஹமது நதீர் மாநாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ,சிறப்பு விருந்தினர்களாக ,18 வாலிபர் தர்கா கமிட்டி ஜகுபர் ,சீனி .மற்றும் 
பலர் கலந்துகொண்டனர்.


இந் நிகழ்ச்சியின் நிறைவாக ஹுசைன் ரஹ்மான் நன்றிஉரை ஆற்றினார்

(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!.

பன்றி காய்ச்சல் தடுப்பு மருந்து (இன்ப்ளுன்ஷா A (H1 N1) தற்போது கீழக்கரையிலும் ..!!

கீழக்கரை
    கீழக்கரை நகர் நல இயக்கம் தற்போது நாடு முழுவதும் பரவி வரும் பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது .இதன் முதன் முயற்சியாக கீழக்கரை நகர் முழுவதிலும் உள்ள ,பள்ளிகூடங்கள் ,அரசு நிறுவனங்கள்,கல்லூரிகள் ,சமுதாய அமைப்புகள் ,அணைத்து ஜமாத்துகள் ,தனியார் மருத்துவமனைகள் போன்ற இடங்களில் .A1(H1N1) இன்புளுன்ஷா சுவரொட்டிகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது .
.


இதன் விளைவாக பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு மருந்து தற்போது கீழக்கரை தனியார் மருத்துவமனைகளில், வந்துள்ளது  இது குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் கேட்டபோது.இந்த மருந்து பன்றிக்காய்ச்சல் வரும் முன்  முன்நடவடிக்கையாக இந்த மருந்தை பயன்படுத்தலாம் என்று கூறினார்.

 (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
      (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!)

Monday 16 March 2015

பேர்ல் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 22 ம் ஆண்டு விளையாட்டுவிழா ..!!



கீழக்கரை 14.03.2015

         வள்ளல் சீதக்காதி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பேர்ல் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 22 ம் வருட விளையாட்டுவிழா அந்த பள்ளியின் தாளாளர் ஜனாப ,சரிபா அஜீஸ் அவர்கள் தலைமையில் நடந்தது.

           இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கீழக்கரை காவல் துனைகண் கானிப்பாளர் K.மகேஸ்வரி M.SC ( IT ), அவர்கள் கலந்துகொண்டார்கள்.



மற்றும் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முதல்வர் சுமையா ,சீதக்காதி அறக்கட்டளையின் பொது மேலாளர் ஜனாப் ,சேக் தாவூது,மற்றும் அப்பள்ளியின் முதல்வரும் கலந்துகொண்டனர்.

 இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

  மற்றும் மாணவர்களின் கராத்தே செய்துக்காட்டபட்டது,தேசிய அளவில் கோவையில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

 இப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பாக கராத்தே பயிற்சி அளித்த பயிற்சியாளர் திரு.கண்ணன் அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
.


 இந் நிகழ்ச்சியின் நிறைவாக அப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி  K.மகேஸ்வரி அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் அப்பள்ளியில் பனி புரியும் ஆசிரியையால் நன்றி கூறப்பட்டது.

   (என்றும் மக்கள் நலப்பனியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
              (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!)
   

Saturday 14 March 2015

கீழக்கரையில் அழுகிய நிலையில் உயிருக்கு போராடும் மூதாட்டி ...!!

கீழக்கரை 14.03.2015
       கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் அலுகிய நிலையில் ஒரு மூதாட்டி சுமார் ஒரு வாரமாக மூடிய நிலையில் இருந்ததை அடுத்து ,திரு வேலாயுதம் அவர்கள் தொலைபேசியில் கீழக்கரை நகர் நல இயக்கத்திற்கு தகவல் தெரிவித்தார்.



       உடனே கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் பஷீர் அவர்கள் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு பார்த்த போது அவர்கள் சொன்னது உண்மை என புரிந்தது.


       அங்கு தினமும் சிறிய பேருந்து நடத்துனர் தமிழரசன் அவர்களிடம் கேட்டபோது இந்த பெண்மணியை நான் கடந்த ஒருவாரமாக பார்த்து வருகிறேன்.இந்த பெண்ணுக்கு சொந்த பந்தங்களோ இருப்பதாக தெரியவில்லை.எப்போது பார்த்தாலும் போர்வை போர்த்தியபடி இருக்கும் யாரும் பார்காததினால் லேசான துர்நாற்றம் வீசுகிறது.இந்த மூதாட்டிக்கு முறையான சிகிச்சை அளித்தால் காப்பாற்றலாம் என்று கூறினார்.


             இதை அடுத்து கீழக்கரை நகராட்சி தலைவி அவர்களிடம் தொடர்புகொண்டு விவரங்களை சொன்னபோது உடனே அந்த மூதாட்டியை தகுந்த சிகிசை அழித்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படும் என்று உறுதி அளித்தார்  

(என்றும் மக்கள் நலப்பனியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
           (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...)

Friday 13 March 2015

கீழக்கரை தாலுகா இன்று அதன் பனிகளை துவக்கிறது ..


கீழக்கரை:14.03.2015


      கீழக்கரையில் தனிதாலுகவாக   துடங்க  கடந்த   6.3.2015       தமிழகஅரசு 
     அரசு ஆணை வெளியிட்டது, இதுசம்பந்தமாக 18 வது  வார்டு உறுப்பினர் 
M.U.V. முகைதீன் இபுராகிம் கூறியதாவது.மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் .கீழக்கரையில்  நகராட்சி அலுவலகத்தில் இன்று 14/3/2015 அதன் சேவையை துவங்குகிறது.இதற்காக உழைத்தஅனைத்து நல் உள்ளங்களுக்கு தன் நன்றியை தெரிவித்து கொண்டார்.

 (என்றும் மக்கள் நலப்பனியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)

    (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக)





     

இராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மாற்றம் ...!!


கீழக்கரை 13.03.2015
                       இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ஆர். டி. ஒ .ராம் பிரதீபன் உத்தரவிட்டுள்ளார்.
   இதன் படி ராமநாதபுர மாவட்டத்தில் 20 இருபதிற்கு மேற்பட்ட கிராமநிர்வாக அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர் .நமதூர் கீழக்கரை கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த செந்தில் விநாயகம் அத்தியுத்துக்கும் .ஆலங்குளம் பன்னீர் செல்வம் கீழக்கரைக்கும்  மாற்றம் செய்யப்பட்டனர் .