தேடல்

Saturday 7 March 2015

பன்றி காய்ச்சல் A(H1 N1) இன்ப்ளுயன்சா விழிப்புணர்வு சுவரொட்டிகள் வழங்கல் ..!!

கீழக்கரை:07.12.2015
கீழக்கரை நகர் நல இயக்கம் கடந்த 4 நான்கு வருடங்களாக பல சமுக பணிகளை செய்து வருகிறது .இது அனைவரும் அறிந்ததே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நமது மாநிலத்தையே உலுக்கிய டெங்கு காய்ச்சல். இதன் பாதிப்பு நமது ஊரிலும் கீழக்கரையிலும் அதிகமாக இருந்தது.இதன் பொருட்டால் நமது மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகநேரிட்டது.இந்த டெங்கு காய்ச்சலில் இறந்தவர்களும் உண்டு.இதன் வீரியத்தை அறிந்து கீழக்கரை நகர் நல இயக்கம் நிலவேம்பு கசாயத்தை மக்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக வழங்கி  வந்தது .தற்போது.தற்போது டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.



ஒன்று போனால் இன்னொன்று வரும் என்பது போல தற்போது நமது தேசத்தையே உலுக்கிகொண்டிருக்கும் பன்றி காய்ச்சல் A(H1 N1) இன்ப்ளுயன்சா. நோய்  தாக்கி ஆயிரக்கனக்கோர் இறந்த செய்தி நாம் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை மூலம் நாம் அறிந்ததே.இந்த பன்றி காய்ச்சல் தற்போது நமது மாநிலத்தில் கோவையில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.இதன் பாதிப்பு நமது மாவட்டத்திலும் குறிப்பாக நமது ஊரிலும் வராமல் தடுப்பதற்கு கீழக்கரை நகர் நல இயக்கம் (பன்றி காய்ச்சல் A(H1 N1) இன்ப்ளுயன்சா)பல தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி  உள்ளது.



கீழக்கரை நகர் நல இயக்கத்தின் முதன் முயற்சியாக பன்றி காய்ச்சலுக்கான நோய்தடுக்கும் முறைகள் நடவடிக்கைகளின்  ஒரு பகுதியாக சுவரொட்டி விளம்பரங்களை அச்சடித்து  பள்ளிக்கூடங்கள் ,கல்லூரிகள் ,

மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ,தனியார் மருத்துவமனை, கோவில்கள் ,பள்ளிவாசல்கள் போன்ற அணைத்து சமுதாய வழிபாட்டுத்தலங்கள்,என அணைத்து இடங்களுக்கும் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது ..


மக்தூமியா தொடக்கப்பள்ளியில் அதன் தலைமை ஆசிரியை ,தாளாளருடன் 
.கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொருளாளர் ஹாஜா அனீஸ் 
.

யூசுப் சுலைஹா மருத்துவமனையின் மருத்துவர் கனி  அவர்களிடம் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் துணை செயலாளர் திரு .கஜேந்திரன் (கெஜி) அவர்கள் வழங்கியபோது .

(கடந்த வருடம் டெங்கு காய்ச்சலில் பாதிக்க பட்ட மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கிய போது)
தற்போது கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பில் பல இடங்களுக்கு இந்த விழிப்புணர்வு சுவரொட்டியை வழங்கி வருகிறோம்.சமுகநல ஆர்வம் மற்றும் அக்கறை உள்ளவர்கள் இந்த விழிப்புணர்வு சுவரொட்டி தேவைப்பட்டால் எங்களது  கீழக்கரை நகர் நல இயக்கத்தை அணுகவும் (தொலைபேசி எண்,ஹாஜா அனீஸ் 750 2686 000,  கஜேந்திரன் (கெஜி) 9942 320417,)

(என்றும் மக்கள் நலப்பனியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ....!!!

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.