தேடல்

Sunday 31 May 2015

கீழக்கரை பத்தாம் வகுப்பு மெட்ரிக் அளவில் முகைதீனியா பள்ளி முதலிடம் ..!

கீழக்கரை: 24/05/2015

கடந்த 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் கீழக்கரை அளவில் மெட்ரிக் தேர்வில் கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பர்ஹத் சிபானா என்ற மாணவி 494 மதிப்பெண் எடுத்து சாதனைபடைத்துள்ளார்  இதே மாணவி 3 பாடங்களில் 100 க்கு நூறு   மதிப்பெண் எடுத்துள்ளார்.


இது குறித்து அந்த பள்ளியின் கல்விக்குழு துணை தலைவர் ஜனாப்.M.M.S.முஹைதீன் இப்ராகிம் அவர்கள் கூறுகையில் இந்த மாணவி படிப்பிலும் ஒழுக்கத்திலும் மற்றும்  பள்ளிக்கு தவறாமல் வருகை போன்றவைகளில் முதலிடம் பிடிப்பார், இதே மாணவி கீழக்கரை அளவில் 494 மதிப்பெண் எடுத்து கீழக்கரை அளவில் முதலிடம் பெற்றுள்ளார், என்பது மிகவும் எங்கள் பள்ளிக்கு பெருமை படக்கூடிய விஷயமாகும் எங்கள் முஹைதீனியா பள்ளியில் பயிலும் அத்தனை மாணவ-மாணவிகளும் நல்ல ஒழுக்கத்துடனும் , நல்ல கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது, கடந்து முடிந்த  பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% சதவிகிதம் தேர்ச்சி பெற்றனர்.

அதே போல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும்  100% சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் . மற்றும் 450 மேல் 16 மாணவ மாணவிகள்  மதிப்பெண் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நல்ல கல்வி கற்றுகொடுக்கும் ஆசிரியைகளுக்கும்,பள்ளியின் முதல்வர் அவர்களுக்கும் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துகொள்வதாக என்று அவர் கூறினார்.

கடந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

என்றும் மக்கள் நல பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!!

Friday 29 May 2015

வாபத் அறிவிப்பு.

கீழக்கரை : 29/052015




கீழக்கரை கிழக்குத்தெரு ஜமாஅத்தைச் சேர்ந்த மர்ஹூம்:மீ.மு.சீனி முகம்மது தம்பி அவர்களின் மகனும், சாகுல் ஹமீது உம்மா அவர்களின் கணவரும் M.நிசார் அகமது, M.நசிர் அஹமது, M. சமீம் அஹமது ஆகியோர்களின் தகப்பனாரும், முகம்மது ரபீக், முகம்மது சாதிக், அய்யூப்கான் ஆகியோரின் மாமனாரும், பூ யாசின் (எ) மர்ஹூம்: முகம்மது யாசின், ஜனாப். செய்யது ஹாமீது, ஹாஜி (எ) சீனி நெய்னா முகம்மது, மர்ஹூம்: முத்து காதர் சாகிப், மர்ஹூம்: M.M.K.ஐதுரூஸ், ஜனாப்.மு.மு.க.முகம்மது அப்துல் காதர் ஆகியோர்களின் மைத்துனருமாகிய முகர்ரமாஸ்டர் (எ) ஹாஜி.மீ.மு.முகம்மது முகர்ரம்    அவர்கள் இன்று (29/05/2015) காலை சுமார் 9.00 மணியளவில்  வஃபாத்தாகி விட்டார்கள்.


                           (இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்)

அன்னாரின் ஜனாஸா சேகுஅப்பா அப்பா பள்ளிவாசல் மையவாடியில் நாளை (30/05/2015)  9 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

செய்தி உதவி : ஹஜிகர் (கிழக்கு தெரு)

Monday 25 May 2015

மாவட்ட ஆட்சியாரிடம் கோரிக்கை மனு...!!

கீழக்கரை : 25/05/2015

தமிழ்நாடு வருவாய்த்துறை சங்க மாநில மையத்தால் அறிவிக்கப்பட்ட மாவட்ட அளவில் மண்டல துணை வட்டாச்சியர் பணியிடம் வழங்க வேண்டும் என்பது குறித்து 16 அம்ச கோரிக்கை வலியுறித்தி மாநில முழுவதும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெருந்திரன் முறையீடு மனு வழங்க வேண்டும்.




என்று முடிவின் அடிப்படையில் இன்று இராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்  சங்க மாவட்டத் தலைவர் திரு S.பழனிக்குமார் முன்னிலையில் மாவட்ட செயலாளர் K.M.தமீம் ராஜா அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெருந்திரன் மனு வழங்கினார் அப்போது மாவட்ட துணைத் துணை தலைவர் திரு P.நாக நாதன் மாவட்ட இணைச்செயலாளர் திரு.சேது ராமன், திரு.சதிஸ் குமார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு.காசிநாத துறை, திரு.பரமசிவம் மற்றும் 62 பெண்கள் உட்பட 197 அலுவலர்கள் கலந்துகொண்டனர். மதிப்பிற்குரிய மாவட்ட மனுவை அரசுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார்.

என்றும் மக்கள் நல பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!! 



Sunday 24 May 2015

கீழக்கரை மக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்...!


கீழக்கரை: 24/05/2015

சித்திரை மாதம் என்றாலே சுட்டெரிக்கும் வெயிலுக்கு நமதூரில் பஞ்சம் இருக்காது, இது ஒருபுறம் இருந்தும் மின்சாரத்தட்டுப்பாடு வேறு இதையே காரணம் காட்டி சில சமுக விரோதிகள், காற்றுக்காக மொட்டைமாடியில் மற்றும் வீட்டின் ஜன்னல்களை திறந்துவைத்து உறங்கும் நேரத்தில் தவறுகள் நடக்கிறது.


இதுகுறித்து கீழக்கரை காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் திரு.சிவசுப்ரமணியம் அவர்கள் கூறியபோது.

  • வெயில் காலமாக இருப்பதால் மொட்டைமாடி கதவு,ஜன்னல் காற்று   வர வேண்டி இரவு நேரங்களில் திறத்து  இருப்பதால்  சமூக     விரோதிகளுக்கு திருடுவதற்கு   வசதியாகி     விடுகிறது    எனவே    மொட்டைமாடி      கதவு ஜன்னலைபூட்டிவிடவும்.
  • வெளியூர், சுற்றுலா செல்லும் பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு வந்து தகவலை தெரிவித்து விட்டு செல்லும் பட்சத்தில் இரவுநேரங்களில் பூட்டிய வீட்டை கண்காணித்து திருட்டு நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்று கூறினார். 


அதுமட்டுமல்லாது 18 வயது பூர்த்தியாகத சிறுவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு பெற்றோர்கள் அனுமதிக்ககூடாது, இரு மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தங்களின் ஓட்டுனர் உரிமம், உரிய ஆவணங்கள் எடுத்து செல்லவும்.




























காவல்துறை அதிகாரிகள் கேட்கும்போது அந்த அவனங்களை அவர்களிடத்தில் காண்பிக்கவேண்டும் இதனால் உங்கள் நேரம் வீண் விரயம் ஆகாது அது மட்டுமல்லாமல் உங்களின் எந்த சிபாரிசம் ஏற்றுக் கொள்ளபடமட்டது என்று கூறினார்.

என்றும் மக்கள் நலபணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!!

Saturday 23 May 2015

கீழக்கரையில் புதியதோர் உதயம்...!!

கீழக்கரை: 23/05/2015


கீழக்கரையில் பெண்கலுக்கான பிரத்யோக ஆடைகளுக்கான புதிய ஷோரூம், வள்ளல் சீதக்காதி சாலையில் V.A.O சாவுடி அருகில் திறக்கப்பட்டுள்ளது இந்த ஷோரூமில், பெண்களுக்கான புர்கா மற்றும் வெளிநாட்டு பொருட்கள் இங்கு கிடைக்கும் இது குறித்து பில்ஷா (FILZA) கடையின் உரிமையாளர் ஜனாப்.பாதுஷா அவர்களிடம் கேட்டபோது.



நாங்கள் பெண்கள் அணியும் புர்காவகையில் பல டிசைன்களில் வெளிநாட்டு மாடல்களில் வளைகுடா நாடுகளில் தயாராகும், துபாய்,சவூதி போன்ற நாடுகளில் விற்பனையாகும், புர்காவை இங்கு இறக்குமதி செய்து பெண்களுக்கு விற்பனை செய்கின்றோம் அது மட்டுமல்லாமல் வெளிநாட்டு வகை சென்ட்,அக்தர்கள்,ஊது போன்ற வாசனை திரவியங்கள் மற்றும் தாவணிகள்,ஷால்,அபாய போன்ற என்னற்ற டிசைன்கள் இங்கு விற்கப்படுகிறது என்று கூறினார்

இவர்கள் வியாபாரம் சிறந்து விளங்க,
கீழக்கரை நகர் நல இயக்கம் வாழ்த்துகிறது...! 

கீழக்கரை நகரின் சாலை போக்குவரத்தை சரி செய்வது எப்படி..?

கீழக்கரை:23/05/2015

  நமதூரின் தற்போது வாகன நெரிசல்  தாலுகா அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் செயல்படுவதினால் நாளுக்கு நாள் மக்கள் இரு மற்றும் நான்குசக்கர வாகனங்கள் பயன்பாடு அதிகமாகிவருகிறது இதை கருத்தில்கொண்டு கீழக்கரை நகர் நல இயக்கம் ஏற்பாடு செய்த( கீழக்கரையில் போக்குவரத்து    சிக்கலை    தீர்ப்பது        எப்படி      ஒரு   கலந்துரையாடல்)    இந் நிகழ்வானது  நேற்று 22.05.2015. அன்று நடந்தது .இந் நிகழ்ச்சியில் அணைத்து சமுதாய சமுக நல அமைப்புகளும், மற்றும் கீழக்கரை அணைத்து  ஜமாத்துகளும் கலந்து கொண்டது.


     இந் நிகழ்ச்சிக்கு கீழக்கரை  நகர் நல இயக்கத்தின் தலைவர் ஓய்வுபெற்ற  ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் M.M.S.செய்யது இபுராஹீம் தலைமை வகித்தார் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் கௌரவஆலோசகர் ஜனாப்.K.T.M.A.ஹமீது அப்துல் காதர்  முன்னிலை வகித்தார்.இயக்கத்தின் செயலாளர் ஜனாப் .A. சேகு பஷீர் அஹமது வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.


  இந் நிகழ்ச்சிக்கு முக்கிய அழைப்பாளர்களாக கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் உயர் திரு .K.மகேஸ்வரி அவர்களும்,கீழக்கரை தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் ஜனாப்.K.M.தமீம் ராஜா அவர்களும்,கீழக்கரை நகராட்சி ஆணையாளர் C.முருகேசன் அவர்களும்.கீழக்கரை காவல் துணை ஆய்வாளர் திரு .சிவசுப்ரமணியம் அவர்களும் கலந்து கொண்டார்கள்.




நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அரசு துறை அதிகாரிகளிடம் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கீழக்கரை நகரின் போக்குவரத்து சம்பந்தமாக கேள்விகள் கேட்கப்பட்டது. இக்கூட்டத்தில்  அன்பு நகரை சேர்ந்த திரு ரவிசந்திரன் அவர்கள் கூறும் போது .நமதூர் புதிய பேருந்து நிலையம் அருகில் மதுபான கடை இருப்பதால் பெண்கள் செல்வதற்கு  இடையுறாக உள்ளது.


ஐந்தாம் வார்டு உறுப்பினர் சாகுல் ஹமீத் அவர்கள் தாலுகா மற்றும் நகராட்சிக்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு மலேரியா கிளினிக் உள்ளே வாகனம் நிறுத்துவதற்கு அனுமதிக்கவேண்டும்.தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கீழக்கரை நகர் தலைவர் ஜனாப் சிராஜுதீன் அவர்கள் சொன்னபோது.VAO சாவடி அருகே திருப்பத்தில் பேருந்துகள் நிற்பதால் வாகன நெரிசலுக்கு இதுவும் ஒருகாரணம் என்றார் .





  வேல் அவர்கள் சொன்னபோது வள்ளல் சீதக்காதி சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் ஓரளவுக்கு போக்குவரத்து இடையூறு இருக்காது.


 கீழக்கரை SDPI  நகர் தலைவர் முஜீப் ரஹ்மான் அவர்கள் கூறியபோது  காய்கறி ஏற்றி வரும் வாகனங்கள் காலையில் வராமல் பள்ளிகூட நேரத்தில் வருவதினால் போக்குவரத்து  இடையுறு ஏற்படுகிறது .

தெற்குதெருவை சேர்ந்த நிஸ்பர் அவர்கள்  சென்னையிலிருந்து வரும் தனியார் வாகனங்கள் ஓம்னி பஸ் ஆட்களை இறக்கிவிடும்போது ஊரின் உள்ளேயும்.பயணிகளை ஏற்றி செல்லும்போது புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்றால் ஓரளவுக்கு போக்குவரத்து சரிசெய்யலாம் என்றார்.இது போல சுகாதாரம் தாலுகா சம்பந்தமாக கேள்விகள்  கேட்கப்பட்டு அதற்க்கு அரசு அதிகாரிகள் பதில் அளித்து மக்கள் சொன்ன கருத்துகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறிதி அளித்தனர்


 இந் நிகழ்வின் நிறைவாக கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொருளாளர் ஜனாப் ஹாஜா அனீஸ் நன்றி கூறினார்.

 அன்பார்ந்த  வளைகுடா வாழ் கீழக்கரை  அணைத்து சமுதாய மக்களே நமதூரின் போக்குவரத்து சரிசெய்வது எப்படி என்று உங்களின் மேலான கருத்துகளை எதிர்பார்கிறோம் உங்கள் கருத்துகளை எங்களுக்கு அனுப்பிவையுங்கள் உங்கள் கருத்துகளை அனுப்பவேண்டிய முகவரி:

   கீழக்கரை நகர் நல இயக்கம்
  19 /14 வள்ளல் சீதக்காதி சந்து 
 வள்ளல் சீதக்காதி சாலை 
  கீழக்கரை (ராமநாதபுரம் DIST)
  email.maraikastt@gmail.com

Tuesday 19 May 2015

கீழக்கரை நகர் நல இயக்கம் நடத்தும் இலவச மருத்துவ முகாம்..

கீழக்கரை:19/05/2015

கீழக்கரை நகர் நல இயக்கம் வருடம் தோறும் உதடு உள்ளம் அன்னம் பிளவு பட்டோர்க்கான அறுவைசிகிச்சை முகாம் நடத்தி வருகின்றது, இதன் தொடர்ச்சியாக வரும் 23.05.2015 சனிக்கிழமை காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரை ராமேஸ்வரம் மேலத்தெரு ரோஜா மஹாலிலும், மதியம் 12 மணிமுதல் 2 மணிவரை இராமநாதபுரம் PVM அறக்கட்டளை பாரதிநகரிலும், அதே நாள் பரமக்குடியில் 3  மணியிலிருந்து 4 மணிவரை புளு ஸ்டார் நிறுவன வாளகத்தில் நடக்கவிருக்கிறது.


இம்மருத்துவமுகாமில் கீழக்கரை நகர் நல இயக்கம், மீனாட்சி மிஷன் மருத்துவமணை, மற்றும் ரோட்டரி கிளப் ராமேஸ்வரம். PVM அறக்கட்டளை, வீரம்மாள் கல்வி தொன்டுநிறுவனம் இணைந்து நடத்துகிறது இம் மருத்துவ முகாமில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

(என்றும் மக்கள் நல பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!!

Thursday 14 May 2015

கீழக்கரையில் மாநில தேர்தல் ஆணையரை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..!!

கீழக்கரை:15/05/2015


வாக்காளர் பட்டியலில் ஆதார் அட்டை இணைக்கும்பணியை செவ்வனே செய்து முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் எதிர் வரும் 31.07.2015 வரை காலஅவகாசம் கொடுத்திருந்தும் எவ்வித நிதி ஒதிக்கீடு, பணியாளர்கள் மற்றும் காலஅவகாசம் ஏதும் வழங்காமல் 31.05.2015க்குள் முடிக்க கட்டாயப்படுத்தும் மாநில தேர்தல் ஆணையர் திரு.சந்திப் சக்சேனா தனது போக்கினை கைவிடக் கோரி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகம் முன்பு வட்டக்கிளைத் தலைவர் திரு.பொ.முருகன் தலைமையிலும் வட்ட கிளை செயலாளர் திரு.தெய்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.


மேற்படி ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் திரு.கே.எம்.தமிம் ராஜா, வட்டகிளைத்துணைத் தலைவர் திரு.எஸ்.ரவிச்சந்திரன், வட்டக்கிளை பொருளாளர் திரு.த.சாமிநாதன், வட்டகிளை இணைச்செயலாளர் செல்வி.மேனகா மற்றும் 4 பெண்கள் உட்பட 31 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.எஸ்.நடராஜன் நன்றி கூறினர்.

என்றும் மக்கள் நல பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக...!!)

Monday 11 May 2015

புதுப்பொழிவுடன் கீழக்கரை மெடிக்கல் மிஷின்..!

கீழக்கரை:11/05/2015


    கீழக்கரையில்  கடந்த மூன்று வருடமாக கீழக்கரை மெடிக்கல் மிஷின் மருத்துவமனை இயங்கி வந்தது. தற்போது  பெஸ்ட் ஸ்டார்  குழுமத்தின்  கீழ் தற்போது இயங்கி வருகிறது. இம் மருத்துவமனை நமது கீழக்கரை மக்களின் எதிர்பார்ப்பை  பூர்த்தி செய்து வருகிறது.


   சிறிய நோயாக இருந்தாலும் அருகிலுள்ள  ராமநாதபுரத்திற்கு செல்லும் காலம் இன்றளவும்  இருந்து வருகிறது  காரணம் சரியான முறையில் நமதூருக்கு மருத்துவமனையும் மருத்துவமும்   இல்லாத காரணம் தான்.




   இனி அந்த கவலை நமதூர் மக்களுக்கு ஏற்படாத வண்ணம் அணைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய மருத்துவமனை பெஸ்ட் ஸ்டார் குழுமத்தின் மூலம் தற்போது கிழக்குதெருவில் 24 மணிநேரமும் கீழக்கரை மெடிக்கல் மிஷின் என்ற பெயரில் இயங்கி வருகிறது.



   இது குறித்து பெஸ்ட்  ஸ்டார்  குழுமத்தின் செயல் இயக்குனர் சுல்தான் அப்துல் காதர் ,மற்றும்  பெஸ்ட்  ஸ்டார் குழுமத்தின் இயக்குனர் திரு,அழகேசன் அவர்களிடம் கேட்டபோது. எங்களது குழுமத்தின் சார்பில்  இந்த மருத்துவமனையை நடத்தி வருகிறோம்.இம் மருத்துவமனையில். சிறப்பு மருத்துவர்கள் வாரம் இருமுறை வெள்ளி மற்றும் செவ்வாய்  கிழமைகளில் பெண்கள் மகப்பேறு மருத்துவர்  கமலா ராகுல் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் புரோஸ்கான் 



  மற்றும் பெண்களுக்கான பொது மருத்துவர் அல் அம்ரா MBBS, சுல்தான் MBBS  மற்றும் (24) மணிநேரம் மருத்துவ சேவையை கருத்தில்கொண்டு இரவில் ஒரு மருத்துவரும் பணிபுரிந்து வருகின்றனர் . இம் மருத்துவமனையில் செல் கவுண்டிங் மிசின், பிசியோதெரபி ,உயர் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் உபகரணங்கள்.மேலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில்  எங்கள் மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள்  நடத்திவருகிறோம்  கடந்த 5 ம் தேதி அன்று உடல் எலும்பில் சுண்ணாம்பு சத்தை அறியும் பரிசோதனை முகாம்கள் நடத்தி 300 மேற்பட்டவர்கள் பயனடைந்தனர் (இந்த பரிசோதனை ஒரு நபருக்கு 1500 ரூபாய்) இது போன்ற இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறோம். என்று கூறினார்கள்.


 இம் மருத்துவமனையின் சிறப்பம்சமாக 24 மணி நேரமும் மருந்துகள் கிடைக்கும் வண்ணம் மருந்துகடை செயல்பட்டு வருகிறது  என்பது குறிப்பிட தக்கது.
  இம் மருத்துவமனை 12.05.2015 அன்று திறக்கப்படஉள்ளது. இம் மருத்துவமனை சிறந்து விளங்கி  சிறப்புடன் செயல்பட கீழக்கரை நகர் நல இயக்கம் வாழ்த்துகிறது.
   
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
                        (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!)

Wednesday 6 May 2015

கீழக்கரையில் +2 தேர்வு முடிவில் மாணவி முதலிடம்

கீழக்கரை:07/05/2014


கீழக்கரை +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம், கடந்த +2 தேர்வில் கீழக்கரையில் உள்ள மாணவ மாணவிகள் 1000-த்திற்கு மேற்பட்டோர் தேர்வு எழுதினர், இதில் இஸ்லாமிய பள்ளி மாணவி மௌபிகா 1150  மதிப்பெண்கள் எடுத்து கீழக்கரை நகர் அளவில் முதலிடம் பிடித்தார், இந்த மாணவி கணிதத்தில் 200/200 மதிப்பெண் எடுத்துள்ளார் நகர் அளவில் அதிக மதிப்பெண் இந்த மாணவியையும் மற்ற வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும் கீழக்கரை நகர் நல இயக்கம் வாழ்த்துகிறது.

(என்றும் மக்கள் நல பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம்..!!  நித்தம் பேணுக...!! 

Saturday 2 May 2015

கீழக்கரையில் நியாயத்தை கேட்டவருக்கு தண்டணையா .?


கீழக்கரை 02.05.2015
 கீழக்கரையில் தமிழக அரசின் விலையில்லா  பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி.போன்றவை வழங்கப்பட்டு வருகிறது,கடந்த வாரம் விளையாட்டு துறை  அமைச்சர் திரு. சுந்தர்ராஜன் இதை தொடங்கிவைத்தார் .
    இதனை அடுத்து விலையில்லா பொருட்கள் 3,4,5 போன்ற வார்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இந்த விநியோகத்தில் குளறுபடிகள் நடந்ததால்  விலையில்லா பொருட்களை வாங்கவந்த மக்கள் வெயிலில் நீண்ட நேரம், காத்திருந்து வெறும்கையோடு திரும்பி சென்றனர்.
   உடனே அந்த பகுதியில் வசிக்கும் இந்திய தவுஹீத் ஜமாஅத் நிர்வாகி எர்ணாகுளம் பஷீர் அவர்கள் அங்கிருந்த மக்களை அழைத்து கொண்டு நகராட்சி தலைவி வீட்டுக்கு சென்று நியாயம் கேட்க சென்றார்.இதனால் அங்கு பரபரப்பு நிலவியது .நகராட்சியின் தலைவியின் கணவருக்கும் எர்ணாகுளம் பஷீருக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது.இதை அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் இருவரையும் சமாதனம் செய்து அனுப்பிவைத்தனர்.


                                              நியாயம் கேட்ட எர்ணாகுளம் பஷீர் 

 இதனை அடுத்து எர்ணாகுளம் பஷீர் மீது சேர்மன் சார்பில்   காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

                    கீழக்கரை இந்தியன் தவுஹீத் ஜமாத்தின் நகர் தலைவர் 

  இது குறித்து   இந்தியன் தவுஹீத் ஜமாத்தின் கீழக்கரை நகர் தலைவர் ஜனாப் ஹாஜா முகைதீன் அவர்களிடம் கேட்டபோது. தமிழக அரசின் விலையில்லா பொருட்கள். வழங்குவதில் குளறுபடிகள் நடந்ததால் இதுகுறித்து எங்களது கீழக்கரை இந்தியன் தவுஹீத் ஜமாஅத் நிர்வாகி எர்ணாகுளம் பஷீர் அவர்கள் சேர்மனிடம் நியாயம் கேட்க சென்றபோது சேர்மனின் கணவர் ரிஸ்வான் அவர்கள் எங்களது இந்தியன் தவுஹீத் ஜமாத்தையும், அதன் தேசிய தலைவரை பற்றியும்.அதன் இயக்கத்தில் எங்களை பற்றியும் தரக்குறைவாக பேசிவுள்ளார். இதனை கண்டித்து இந்தியன் தவுஹீத் ஜமாஅத் சார்பில் நகராட்சியின் தலைவியின் கணவர்மீது நடவடிக்கை எடுக்க கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளோம்.அதுமட்டுமல்லாமல். இதை கண்டித்து கீழக்கரை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானித்துள்ளோம்.என்று கூறினார்.

             (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
                             (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)