தேடல்

Wednesday 11 March 2015

131 ஆண்டுகளை கடந்த பாரம்பரிய மிக்க பள்ளிக்கூடம் ..!!

கீழக்கரை 11.03.2015
            கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி 1885 ல் துவக்கப்பட்டு 1912 ல் முறையே அரசின் அங்கீகாரம் பெற்றது. சென்ற 131 ஆண்டுகளாக இயங்கிவரும் இப்பள்ளி கிழக்குதெரு ஜமாஅத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது இராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் 100 நூறு ஆண்டுகளை தாண்டிய பள்ளிகளில் இதுவும் ஒன்று.


                  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணுமுமாக வளர்ந்த இப்பள்ளி தற்சமயம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பத்தொன்பது பிரிவுகளையும் பத்தொன்பது ஆசிரியர்களையும் தன்னகத்தே கொண்டஒரே பள்ளியாக பரிநாமிக்கின்றது. சுமார் 750 மாணவர்கள் இங்கு பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




  இப்பள்ளியில் அன்றிலிருந்து இன்றுவரை  சுமார்  15 பதினைந்து தாளாளர்கள்  சிறப்புடன் பணிபுரிந்து இப்பள்ளியின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டிருக்கிரார்கள் என்றால் அது  மிகையாகாது.




அதுபோல இங்கு படித்து சென்ற மாணவர்கள் தற்போது உயர் பதவியிலும் 
,ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர்களாகவும், மருத்துவராகவும் ,வக்கீலாகவும் ,பெரும் தொழிலதிபர்களாகவும் .இருக்கிறர்கள் என்றால் இப்பள்ளி பாராம்பரியம் மிக்க பள்ளி என்று சொல்வதில் மாற்றுக்கருத்து இல்லை .


  மேலும் இப்பள்ளி சிறப்புடன் வளர்ந்து நல்ல பல மாணவ மாணவிகளை உருவாக்கி அவர்கள்   உயர்பதவிகளை வகிக்க,மற்றும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டுகொண்டிருக்கும் பள்ளியின் தாளாளர் ,தலைமை ஆசிரியர் ,மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் ,மேலும் இப்பள்ளியை நிர்வகித்து வரும் கிழக்குதெரு ஜமாஅத் நிர்வாகிகளுக்கும்  கீழக்கரை நகர் நல இயக்கதின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.        

 (என்றும் மக்கள் நலப்பனியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
          (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ....!!)

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.