தேடல்

Sunday 13 December 2015

கீழக்கரை கடலில் தவறிவிழுந்து வாலிபர் மரணம்..!

கீழக்கரை செய்திகள் : 13-12-2015

கீழக்கரையில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் மீனாட்சி புரத்தை   சேர்ந்த சின்னசாமி,    S.N. தெருவை சேர்ந்த காசீம் மற்றும் சங்கர் ஆகிய  முன்று    நபர் களும் கீழக்கரை ஜெட்டி பாலத்திற்கு சென்றனர்.



இதில் சங்கர் என்ற வாலிபர் தவறி கடலுக்குள் விழுந்துவிட்டார் உடனே மற்ற இரண்டு நண்பர்களும் அவரை காப்பாற்றுவதற்காக கடலுக்குள் குதித்து தேடினர். நீண்ட நேரம் தேடியும் சங்கரை காணவில்லை  உடனே சலீம் மட்டும் நீந்தி கரைஏறிவிட்டார் சங்கரை தேடி சென்ற சின்னசாமியையும் காணவில்லை. மீன் பிடிப்பவர்கள் மூலம் சுமார் 1 மணி நேரம் தேடிப்பார்த்த பிறகு  கடலுக்கு அடியில் சங்கர் மற்றும் சின்னசாமியை மீட்டு கீழக்கரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இதில் சின்னசாமீ காப்பாற்றப்பட்டார், சங்கர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துவிட்டார். இது குறித்து கீழக்கரை காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் மருத்துவ முகாம் ..!! கீழக்கரை நகர் நல இயக்கம் ஏற்பாடு..!!

கீழக்கரை செய்திகள் : 13-12-2015

கடந்த சில தினங்களுக்கு முன் நமது தலை நகரை மழை வெள்ளம் புரட்டி போட்டு அதன் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கபாட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நுங்கம்பாக்கம் நிவாரண முகாம்களுக்கு சென்று வழங்கியது.





 இதன் தொடர்ச்சியாக சென்னை நகர் அணைத்து பகுதியிலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதுடன் தோற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.இதனை கருத்தில் கொண்டு நமது கீழக்கரை நகர் நல இயக்கமும்,மதுரை மீனாக்ஷி மிஷின் மருத்துவமனையும் இணைந்து .கீழக்கரை நகர் நல இயக்கத்தின் ஸ்தாபகரும்,கௌரவ ஆலோசகருமான ஜனாப் K.T.M.A.ஹமீது அப்துல் காதர் தலைமையில் .சென்னையில் புளியந்தோப்பு பகுதியில் உள்ள அரசு மாநகராட்சி தொடக்க பள்ளியில் இம் மருத்துவ முகாம் நடைபெற்றது.சுமார் ஆயிரம் பேருக்கு குழந்தை உட்பட அனைவருக்கும் மருத்துவ உதவி செய்ததுடன் மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.






இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் கௌவுரவ ஆலோசகர் ஜனாப் P.M.S.ரபீக் சாதிக் அவர்கள் கூறுகையில் சென்னையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் படும் இன்னல்களை கண்டு நமது கீழக்கரை நகர் நல இயக்கம் அங்கு சென்று  பாதிக்கபட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் அவர்ளுக்கு தேவையான பொருட்களை வழங்கியது.

அதுமட்டுமல்லாமல் நமது இயக்கமானது மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தோற்று நோய்களால் அவதிப்படும் பொதுமக்களுக்கு மதுரை மீனாக்ஷி மிஷின் மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவமுகாம் நடத்தி மருத்துவ உதவி செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது .என்று கூறினார்.


  (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )

         சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ....!!

Wednesday 9 December 2015

கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் வெள்ள நிவாரண வழங்கல் ஆலோசனை கூட்டம் ..!!

கீழக்கரை 08/12/2015

கீழக்கரை வடக்குதெரு ஜமாஅத் நிர்வாக சபை ஏற்பாடு செய்திருந்த அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் வடக்குதெரு மஸ்ஜிதுல் மன்பயி பள்ளியில் நடைபெற்றது.

இக் கூட்டத்தை அணைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் செயலாளர் ஜனாப் முஹைதீன் தம்பி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் அணைத்து ஜமாஅத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர், இது குறித்து அக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்குதெரு ஜமாத்தின் பொருளாளர் ஜனாப் அஜிஹர் அவர்களிடம் கேட்டபோது.


 சமிபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு எந்த வகையில் நமது கீழக்கரை ஜமாஅத் கூட்டமைப்பு உதவுவது குறித்து ஆலோசனை நடைபெற்றது,இந்த ஆலோசனையில் அந்தந்த ஜமாத்தார்களிடம் நிதி உதவி பெற்று சென்னையில் இயங்கிவரும் கீழக்கரை மெர்கண்டைல் அசோசியேசனக்கு வழங்கி அவர்கள் மூலமாக பாதிக்கபட்ட மக்களுக்கு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.என்று கூறினார்


 இது சம்பந்தமாக அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளும் பொதுமக்களும் வடக்குதெரு ஜமாஅத் நிர்வாக சபையின் செயலாளர் ஜனாப் முஹைதீன் இபுராஹீம்/மற்றும் மௌலா முஹய்தீன் அவர்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .CELL NO : 9688993380 / 9840943144

             (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
                                  சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!

Tuesday 8 December 2015

கீழக்கரை முஹிதீனியா கல்விகுழுமம் சார்பில் வெள்ள நிவாரணம் வழங்கல்..!!

கீழக்கரை 8/12/2015

  கீழக்கரை வடக்குதெரு ஜமாஅத் நிர்வாக சபையின் கீழ் இயங்கும் முஹிதீனியா கல்விகுழுமம் சார்பில் சென்னை மற்றும் கடலூருக்கு மழை வெள்ளத்தால் பாதிக்க பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு  வெள்ள நிவாரண பொருட்கள் சென்னையில்  தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 
 இதுகுறித்துவடக்குதெரு  முஹிதீனியா கல்விகுலுமத்தின் தாளாளர்  ஜனாப் மௌலா முஹைதீன் அவர்களிடம் கேட்டபோது


.சென்னை மற்றும் கடலூரில் பாதிக்க பட்ட மக்களுக்கு எங்களது
முஹிதீனியா கல்விகுலுமத்தின் சார்பில் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் தேவைக்கு அரிசி,பருப்பு,போர்வை ,போன்றவை ST கொரியர் மூலம் அனுப்பிவைக்கபட்டது என்று கூறினார்.


இந் நிகழ்வில் முஹிதீனியா கல்விகுலுமத்தின் துணைத்தலைவர் ஜனாப் முஹைதீன் இபுராஹீம்,துணை செயலாளர்,ஜனாப் அஹமது மிர்சா,செயலாளர் மருத்துவர் ராசிக்தீன்,பொருளாளர்,சேகு பஷீர் அஹமது,பள்ளியின் முதல்வர் .நிலோபர்நிஷா,மற்றும் துணை முதல்வர் ரகுநாத சேதுபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.




(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!

Monday 7 December 2015

கீழக்கரை அருகே கம்மாய்க்குள் அரசு பேருந்து கவிழ்ந்தது..!

கீழக்கரை செய்திகள் : 07-12-2015

இராமேஸ்வரத்திலிருந்து பாபநாசம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து காஞ்சிரங்குடி அருகே உள்ள பாலையாறு கம்மாய்க்குள் 40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் கவிழ்ந்தது.





உடனே தகவலறிந்து வந்த கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் காயமடைந்த பயணிகளை மீட்டு கீழக்கரை அரசு பொது மருத்துவமனைக்கும், ராமநாதபுரம் அரசு பொது மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர் .



























வேறு எதாவது பயணிகள் பஸ் அடியில் சிக்கி கொண்டு இருக்கிறர்களா...? என்று அச்சம் நிலவுகிறது. இதனை அடுத்து தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் கீரேன் உதவியுடன் பேருந்தை அப்புற படுத்த போராடி வருகின்றனர்.

(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)                  
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!

Friday 4 December 2015

சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் நிவாரணம் ..!!

கீழக்கரை செய்திகள் 04/12/2015


    சென்னையில் கடந்த நாட்களாக மழை பெய்து அதன் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

 மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அணைத்து சமுதாயமக்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.இதனை அடுத்து கீழக்கரை நகர் நல இயக்கமும் பாதிக்க பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு

    கீழக்கரை நகர் நல இயக்கத்தின் ஸ்தாபகர் K.T.M.A.ஹமீது அப்துல் காதர் அவர்களும், .அவர்களுடைய குடும்பத்தார்களும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை,லுங்கி,சேலை,வேட்டி,மற்றும் உணவுகள் வழங்கினார்கள்.

 (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
                  சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!

Thursday 3 December 2015

கீழக்கரையில் மின்தடை.

கீழக்கரை செய்திகள் : 04-12-2015


கீழக்கரையில் மாதாந்திர மின்பராமரிப்பு மேம்பாடு செய்வதினால் நாளை (05-12-2015) சனிகிழமை அன்று காலை 9 மணி முதல் 5 மணிவரை மின்சாரம் தடை செய்யப்படும் என்பதை ராமநாதபுரம் உதவி மின் செயற் பொறியாளர்  திரு .கங்காதரன் தெரிவித்தார்.

(என்றும் மக்கள் நல பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!!

Thursday 19 November 2015

இரங்கல் அறிவிப்பு ......!!

கீழக்கரை செய்திகள்:20/11/2015

 கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த ஹமீதியா பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் தாளாளரும்,யூசுப் சுலைகா மருத்துவமனையின் இயக்குனரும், கீழக்கரையின் மூத்த மருத்துவருமான ஹாஜி , DR.செய்யது அப்துல் காதர் அவர்கள் நேற்று  வபாத்தாகிவிட்டார்கள்.
                    இன்னா னில்லாஹி வா இன்னா இலைஹி ராஜவூன்

அன்னாரை இழந்து வாடும் அவருடைய  குடும்பத்தார்ளுக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது .


புகைப்பட உதவி (நன்றி.கீழக்கரை டைம்ஸ்)                                                               


(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!! 



Tuesday 17 November 2015

கீழக்கரையில் நாளை (18-11-2015) குறிப்பிட்ட இடங்களில் மின்சார தடை..!

கீழக்கரை செய்திகள்: 17-11-2015

நாளை (18-11-2015) பழுதைடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் நிலை நிறுத்தப்படுவதால் நாளை காலை  9 மணி முதல் மாலை 5 மணி வரை  குறிப்பிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் மின்விநியோகம் இருக்காது. என்பதை கீழக்கரை உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.


மின்சார நிறுத்தப்படும் இடங்கள்:
  1. ஓடக்கரைப் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகள்,
  2. உமர் ஐஸ் பிளான்ட்,லைட் ஹவுஸ் சுற்றியுள்ள பகுதிகள்,
  3. கஜினி டி கடையை சுற்றியுள்ள பகுதிகள்,
  4. சங்கு வெட்டித் தெருவை சுற்றியுள்ள பகுதிகள்,
  5. மேலத் தெருவை சுற்றியுள்ள பகுதிகள்,

சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!!
 (என்றும் மக்கள் நல பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)



Monday 16 November 2015

கீழக்கரையில் அறிவியல் கண்காட்சி அசத்திய மாணவ மாணவிகள் ..!

கீழக்கரை செய்திகள் :15.11.2015

  கீழக்கரை சீதக்காதி அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் பேர்ல் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் கடந்த வாரம் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது .இக் கண்காட்சியை ராமநாதபுரம் நேஷனல்  பள்ளியின் ஆலோசகர் சங்கரலிங்கம் தொடங்கிவைத்து  தலைமை வகித்தார்.

    இப் பள்ளியின் முதல்வர் திருமதி ஷாஹிரா அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார் இதில் இங்கு பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அனைவரும் பார்வையாளராக கலந்துகொண்டனர் .


  நான்காம் வகுப்பிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளின் தங்களின் அறிவியல் ,சுற்றுசூழல் ,புவிவெப்பமயமாகுதல் ,இஸ்லாம் ,சமுக அறிவியல் ,போன்ற படைப்புகளை படைத்து செய்து காட்டினர்.


இதில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவன் ஹக்பில் மறைக்கா  செய்து காட்டிய நிலநடுக்கத்தை முன்கூட்டியே எப்படி கண்டுபிடிப்பது எப்படி என்று  மாதிரியை  அனைவரையும் கவர்வதாக அமைந்தது.
  இதன் செயலாக்கத்தை பற்றி அங்கு நடுவர்களாக வந்திருந்த செயயதம்மாள் பள்ளியின் ஆசிரியர்கள் திரு வெங்கடேஷ்,திரு பாலமுரளி. ஆகியோர் அம்  மாணவனிடம் கேட்டபோது. 


நாம் தற்போது பயன்படுத்தும் செல் போனிலிருந்து வரும் கதிர்வலைகள்.செல்போன் அடிக்கும் முன்னே டிவி , அருகேயோ ரேடியோ அருகேயோ கொண்டுசென்றால் அதன் இயக்கம் தடைபடும் பின்னர் தான் செல்போன் மணியடிக்கும்.இதை அடிப்படையாக கொண்டு இந்த அதி சக்திவாய்ந்த கதிர்வலைகள்  கருவியை நாம் உண்டாக்கி எந்த இடத்தில் அதிகம் நிலநடுக்கம் நேர் கோட்டில் உணரப்படுகிறதோ அங்கு இந்த கதிர்வலைகள் கருவியை பூமியிக்கடியில் வைத்தால்.உதாரணமாக நிலநடுக்கம் என்பது ஒரு நொடிக்கு 14 கிலோமீட்டர் கடக்கக்கூடியது சென்னையில் நிலநடுக்கம் உணரப்பட்டால்  அதன் தொடர்ச்சி நமதூருக்கு வருவதற்கு 39 நொடிகள் ஆகும் அதற்குள் அதிவேக கதிர்வலைகள் கருவி மூலம் அலாரம் அடிக்க தொடங்கிவிடும்.நாம் உடனே பாதுகாப்பான இடத்திற்கு சென்று  நம்மை   பாதுகாத்துகொள்ளலாம் என்று கூறினான்.


  மற்றொரு ஏழாம் வகுப்பில் படிக்கும் மாணவி லிப்திகாவிடம் கேட்டபோது தற்போது  நமது நாடு உள்ள நிலைமையில் சுற்றுப்புறச்சூழ்நிலையில் பயோ கேஸ் மிக அத்தியாவிசயம் ஆகிவிட்டது.இதை இயற்கை சூழ்நிலையில் இருந்தும்,கழிவுகளிலிருந்தும் தயாரிக்கலாம் என்று கூறினார். இந்த இரு மாணவ மாணவியின் அறிவியல் படைப்புகள் .சிறப்பு பரிசை பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  இந்த  அறிவியல் கண்காட்சியை குறித்து பேர்ல் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு நடுவர்களாக வந்திருந்த செய்யதம்மாள் பள்ளியின் ஆசிரியர்களிடம் கேட்டபோது இங்கு அறிவியல் கண்காட்சி மட்டுமல்லாமல்,சுகாதாரம் சுற்றுப்புறசூழல்,சமுக அறிவியல்.இஸ்லாம்,குறித்த அத்துனை விஷயங்களும் மாணவ மாணவிகள் அனைவரும் அழகாக தன் படைப்புகளை உண்டாக்கி இருந்தனர்,என்று கூறினார்கள்.
  அறிவியல் கண்காட்சியின் நிறைவில் ஆசிரியை திருமதி  சூர்யா நன்றி கூறினார்  

   இன் நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கும், மற்றும் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட அனைவரையும் கீழக்கரை நகர் நல இயக்கம் தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
 
   (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
                 ( சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!)

Sunday 15 November 2015

கீழக்கரையில் பிரியாணி அதிரடி விலை குறைப்பு .! போட்டா போட்டி..?

கீழக்கரை செய்திகள்:15.11.2015

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் எராளமான உணவு விடுதிகள் உள்ளன. பலதரப்பட்ட தேநீர் விடுதிகளும் உள்ளன. ஆனால் தற்போது  புற்றீசல் போலே ஆங்காங்கே பாஸ்ட்புட்  துரிதவகை உணவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது .



 தற்போது வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள கடைகளில் முன்பு 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிக்கன் பிரியாணி,தற்போது 40 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட மீன் சாப்பாடு தற்போது 20 ரூபாய்க்கும்  தங்களுடைய வியாபாரம் பெருக போட்டி போட்டு கொண்டு விற்பனை செய்து வருகிறார்கள்.




இது குறித்து வள்ளல் சீதக்காதி சாலையில்  இரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வரும் ஜனாப் இபுராஹீம் அவர்களிடம் கேட்டபோது இப்போது இவர்களிடம் போட்டா  போட்டி நடந்து வருகிறது. இது ஆரோக்கியமான விஷயம் இல்லை. . இது பொறாமையில் கொண்டு சென்றுவிடும்.என்றாலும் இவர்களுடைய போட்டி ஏழை எளிய மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.என்பதில் ஐய்யமில்லை.என்று கூறினார்.



   (  என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம், )
                            சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!

Friday 13 November 2015

இறந்தபின் தான் வேலை பார்த்த பள்ளிக்கே நன்கொடை கொடுத்த மோதினார் (முஅத்தின்)..!

கீழக்கரை செய்திகள் 14/11/2015

  கீழக்கரை வடக்குதெரு ஜமாத்திற்கு சொந்தமான மஸ்ஜிதுல் மன்பயி பள்ளிவாசலில் கடந்த இருபத்தைந்து வருடங்களா முஅத்தின்னாக (மோதினாரக) பணிபுரிந்துவரும் அப்துல் கரீம் அவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வபாதகிவிட்டர்கள்.

                                 
 மறைந்த மர்ஹூம் ஹாஜி. அப்துல் கரீம் 


  அவர்கள் மரணிக்கும் தருவாயில் தன் உடல் நிலைமை சரியில்லாத நிலைமையில் தன மனைவியிடம் தான் வேலை பார்த்த பள்ளிவாசலுக்கு தான் 25 வருடங்களாக சேமித்து வைத்த 21 பவுன் நகைகளை  என்னுடைய மரனத்திற்கு பின் வடக்குதெரு ஜாமத்தில் ஒப்படைத்து விடுமாறு (வசியத்) கூறிவிட்டு சிறிது நாட்களில் இறந்துவிட்டார்கள்.


இதனை அடுத்து அவருடைய மனைவி சிறிது நாட்கள் கழித்து அந்த நகைகளை வடக்குதெரு ஜமாஅத் தலைவர் ஜனாப் அக்பர் கான், செயலாளர் ஜனாப். முகைதீன்  இபுராஹீம், உறுப்பினர்கள் அஹமது நிசார். ஆகியோர்களிடம் ஒப்படைத்தார்கள்.


 அந்த நகைகளின் அன்றைய மதிப்பு ரூபாய் :2,87,986/- ஆகும்.


        நமதூர் கொடைவள்ளல்களும் செல்வந்தர்களும் வாழும் இந்த மண்ணில் சாதாரண மனிதனாக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து இறைவன் இறை இல்லத்தில் முஅத்தினாக பணிபுரிந்து மறைந்த அப்துல் கரீம் அவர்கள் நாம் வாழும் இக் காலத்தில் செத்தும் கொடைகொடுத்த வள்ளல் அப்துல் கரீம் என்ற நல்ல மனிதர் நம்முடைய அனைவருடைய நெஞ்சிலும் நீங்க இடம்பிடித்திருப்பர் என்பதில் ஐய்யமில்லை.

  (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )


     சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!

Wednesday 23 September 2015

வஃபாத் அறிவிப்பு.

கீழக்கரை : 23-09-2015




கீழக்கரை  நடுத்தெரு ஜூம்ஆ பள்ளி ஜமாஅத்தை சேர்ந்த. மர்ஹூம் அரிசிகடை முத்தலீபு ஹாஜியார் அவர்களின் மகனும் மர்ஹூம் சேகுஅப்துல் காதர் என்ற மரிக்கா. மர்ஹூம் அப்துல் கரீம். மர்ஹூம் சாகுல் ஹமீது. மர்ஹூம்   அமானுல்லா. செய்யது ஹூசைன் ஆகியோரின் சகோதரரும். முபாரக். மர்ஹூம் ஜகுபர் ஹீசைன். முகம்மது சிராஜுல் அன்வர் ஆகியோரின் தகப்பனாரும். முகம்மது இபுராகிம். மலபார் சபீர் அகமது ஆகியோரின் மாமனாருமான க.மு.குலாம் ரசூல் அவர்கள் இன்று (23-09-2015) அதிகாலை 3மணியளவில் வஃபாத்தானார்கள் இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜவூன் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நடுத்தெரு ஜூம்ஆ பள்ளி மையவாடியில் இன்று (23-09-2014) இஷாவிற்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

Friday 21 August 2015

கீழக்கரையில் மருத்துவமுகாம் ..!!

கீழக்கரை : 21/8/2015
     
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்ட சிறப்பு மருத்துவ  முகாம் வடக்குதெரு முஹைதீனியா பள்ளி வளாகத்தில் நடந்தது.இம் முகாமை  கீழக்கரை நகர் நல இயக்கம் ,மற்றும் வடக்குதெரு முகைதீனியா கல்விக்குழுமம் ஏற்பாடு செய்திருந்தது. 

 மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிடு திட்டம் பற்றி நமதூர் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நமதூர் மக்களுக்கு அரசு வழங்கக்கூடிய மருத்துவ சேவையை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழக்கரை நகர் நல இயக்கம் கடந்த நான்கு வருடங்களாக செயல்பட்டு வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது .



  இதன் தொடர்ச்சியாக இன்று 21.08.2015 இன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இம் முகாமை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் ஸ்தாபகர் K.T.M.A. ஹமீது அப்துல் காதர் தலைமைவகித்தார்.வடக்குதெரு ஜமாத்தின் தலைவர் ஜனாப் M.Y அக்பர் கான் முன்னிலை வகித்தார்.கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் M.M.S.செய்து இபுறாகீம் வரவேற்புரை நிகழ்த்தினார்.மற்றும்  கீழக்கரை நகர் நல இயக்கத்தின்  கௌரவ ஆலோசகர் ஜனாப் ரபீக் சாதிக்.ஜனாப்.ஜபாருல்லா,ஜனாப்,ரபீக் ,மற்றும் பலர்கலந்துகொண்டனர் .


 இந் நிகழ்வில் 200 க்கும் மேற்ப்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர் கலந்துகொண்ட அனைவருக்கும் கீழக்கரை அரசு பொது மருத்துவமனையின் அலுவலர்.மருத்துவர் ஜவாகிர் ஹுசைன் MBBS DCH,மருத்துவர் ஜமீர் .தமிழ்செல்வி .ஆகியோர் மருத்துவம் ,ஆலோசனைகள் வழங்கி மேல் சிகிசைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர். மற்றும் 25 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு  MRI,CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்பட்டது .



இன் நிகழ்ச்சியின் நிறைவாக கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொருளாளர் ஜனாப் A.M ஹாஜா அனீஸ் நன்றி கூறினார்.

  (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
          (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!!)

Tuesday 18 August 2015

மரண அறிவிப்பு ..!

கீழக்கரை 18.08.2015

  தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட தலைவரும் முதுகுளத்தூர்  தாலுகா மண்டல  துணை வட்டாச்சியர் (துணை தாசில்தார்) திரு பழனிகுமார்  அவர்களுடைய  தந்தை P சுந்தர ராஜன் அவர்கள் இன்று 18.08.2015 அதிகாலை இயற்கை எய்திவிட்டார்கள்.
      அன்னாரின் இறுதி சடங்கு நாளை 19.08.2015  காலை 10 மணியளவில் பரமக்குடி தாலுகா ஊரப்புளி கிராமத்தில் நடைபெறும் 


   அன்னாறை  பிரிந்து வாடும் அக்குடும்பத்தார்களுக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறது .
   
 (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
                  (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)

Saturday 15 August 2015

வடக்குதெரு முகைதீனியா பள்ளியில் சுதந்திர விழா கொண்டாட்டம்..!!

கீழக்கரை.16.08.2015.
 
  கீழக்கரை வடக்குதெரு ஜமாஅத் நிர்வாக சபையின் கீழ் இயங்கிவரும் முகைதீனியா கல்விக்குலுமத்தின் சார்பில் 69வது  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

.

   இவ் விழாவிற்கு வடக்குதெரு ஜமாஅத் நிர்வாக சபையின் தலைவர் ஜனாப் அக்பர் கான்  தலைமை வகித்தார்.வடக்குதெரு ஜமாத்தின் முன்னாள் தலைவர் ஜனாப் ரெத்தின முகம்மது முன்னிலை வகித்தார்.மற்றும்,வடக்குதெரு ஜாமத்தின் துணை தலைவர் ஜனாப் ஜாகிர் ஹுசைன் ,முகைதீனிய கல்விக்குலுமத்தின் துணை தலைவர் ஜனாப் முகைதீன் இபுராஹீம்.செயலாளர் ராசிக்தீன்,  பொருளாளர் ,சேகு பஷீர் அகமது,உறுப்பினர்கள்   ஜனாப் ரபீக் சாதிக் ஜனாப் பஷீர் அஹமது  மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


    இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை தலைமையிடத்து துணை வட்டாச்சியர் ஜனாப் K.M,தமீம் ராசா தேசிய கொடியை ஏற்றிவைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.



   இதில் எராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
  (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
       (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!)

கீழக்கரை தனியார் மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் வருகை.


கீழக்கரை :16/8/2015

கீழக்கரை பெஸ்ட் ஸ்டார் வின் பாத் குழுமத்தின் ஒரு பகுதியாக கீழக்கரையில் அதிநவீன வசதியுடன் கூடிய கீழக்கரை மெடிக்கல் மிஷின் இயங்கி வருகிறது 

இம்  மருத்துவமனைக்கு பல நோய்கள் சம்பந்தமாக பல  சிறப்பு மருத்துவர்கள் வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக இம் மருத்துவமனைக்கு பெண்களுக்கான சிறப்பு மருத்துவர் DR. சுனிதா M.B.B.S DGO வருகை தரவுள்ளார்கள் இவர் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் 22/8/2015 முதல் மாலை 6 மணியிலிருந்து  இரவு  1௦ மணிவரை வருகை தரவுள்ளர்கள் பெண்களுக்கான கர்ப்பப்பை சோதனை ஸ்கேன் செய்து சிறப்புடன் பணியாற்றவுள்ளார்கள் என இம்மருத்துவமனையின் நிர்வாகி ஜாபிர்  சுலைமான் தெரிவித்துள்ளார்.
   
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
    (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)

Thursday 6 August 2015

அமரர் அப்துல் கலாமுக்கு அமைதி பேரணி கீழக்கரையில்..!

கீழக்கரை செய்திகள் 6/8/2015
முகைதீனியா  கல்விக்குழுமம் சார்பில் மறைந்த மேதகு பாரத ரத்னா முன்னால் குடியரசு தலைவர்  APJ அப்துல் கலாம் அவர்களின் நினைவாக ஏர்வாடி முக்குரோட்டில் இருந்து  வள்ளல் சீதக்காதி சாலை வரை கடற்கரை வரையில் நடந்தது  




 
இதில் முகைதீனியா  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் முகைதீனிய தமிழ் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இணைந்து மொத்தம் 250 மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.



 இப்பேரணியை கீழக்கரை தாலுகா தாசில்தார் கே.K.M தமிம் ராசா அவர்கள் கொடி அசைத்து தொடக்கி வைத்தார்கள்.

  இந்நிகழ்ச்சியில் முகைதீனியா  கல்விக்குழுமத்தின் துணை தலைவர் M.M.S முகைதீன் இபுறாஹீம் .செயலாளர் .மருத்துவர் ராசிக்தீன் MBBS,பொருளாளர்.சேகு பஷீர் அஹமது ,உறுப்பினர் ரபீக் சாதிக் ,பள்ளியின் முதல்வர் நிலோபார் நிஷா ,துணை முதல்வர் சேதுபதி ராஜா . மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


இப்பேரணியின் நிறைவில் முகைதீனியா  கல்விக்குமத்தில் பயிலும் அத்துனை மாணவ மாணவிகளும் மறைந்த முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பத்து பொன்மொழிகளை கடைபிடிப்போம் என்று உறுதிமொழி எடுத்துகொன்டனர். 

         என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்
                                சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!