தேடல்

Friday 6 March 2015

மக்கள் காட்சி பொருளாக காத்திருக்கும் "நம்ம டாய்லட்"....


கடந்த 2 வருடங்களுக்குமுன்பு மத்திய மாநில அரசின், உட்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் நமதூர் கீழக்கரை நகராட்சிக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, கழிப்பறை 'நம்ம டாய்லட்' பன்னிரெண்டு (12) வழங்கப்பட்டது. இது வரையிலும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் வெறும் காட்சிபொருளாக மட்டுமே உள்ளது.



இது குறித்து கீழக்கரை நகர் காங்கிரஸ் தலைவர் A.ஹமீது கான் ex.MC ம், மற்றும் கீழக்கரை 5 வார்டு நகர்மன்ற உறுப்பினர் M.ஷாகுல் ஹமீது அவர்களிடமும் கேட்ட போது "நம்ம டாய்லட் வழங்கி 1 1/2 ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் ரூபாய் 54 லட்சம் வீண் விரயம் ஆனது தான் மிச்சம், இதுவரையிளும் மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. இது வெறும் காட்சி பொருளாக நகராட்சி வாசலிலும், அரசுமருத்துவமனை வாசலிலும், அலங்கார பொருளாக இருப்பதுதான் மக்கள் வேதனைப்படும் விஷயம். 




நமது ஊருக்கு வெளிஊரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், தங்களின் இயற்க்கை உபாதைகளை நிறைவேற்றுவதற்கு 'அங்கும் இங்கும்' தேடி அலைகிறார்கள், இரவு நேரங்களில், ஆங்காங்கே ரோடுகளில் சிறுநீர், மலம்,ஜலம், கழித்து விட்டு செல்கிறார்கள். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது, இந்த நம்ம டாய்லெட் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தால் நல்லது இல்லையேல் இது வெறும் காட்சிப்பொருளாக மட்டும் இல்லாமல் துருப்பிடித்து மக்கள் பணம் வீண் விரயமாகிவிடும்" என்று கூறினார்கள்.




கீழக்கரையில் தனி தாலுகா அமையபோகும் இந்நேரத்தில் நம்ம  டாய்லெட் மக்கள் பயன்பாட்டிற்கு வருமா ? எதிர்பார்ப்பில் மக்கள்....!!

(என்றும் மக்கள் நலப்பனியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
             சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!)

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.