தேடல்

Monday 9 March 2015

கை தொடும் தூரத்தில் (காவு) கரண்ட் கம்பிகள் ..!! மாற்றித்தர கோரிக்கை ..!

கீழக்கரை 10.03.2015
       கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பருத்திகார தெருவிற்கு செல்லும் பாதையில் கைதொடும் தூரத்தில் உயர் அழுத்த மின்சார (ட்ரான்ஸ்பார்மர்) கை தொடும் தூரத்தில்  இருப்பதினால் அங்கு வசிக்க கூடிய மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.இதை மாற்றி தரக்கோரி அல்லது அதை உயர்வாக அமைத்து தரக்கோரி .கீழக்கரை நகர் நல இயக்கதிர்ற்கு அங்கு வசிக்கூடிய மக்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இதை அடுத்து கீழக்கரை நகர் நல இயக்கதின்  சார்பில்  ராமநாதபுரம் உதவி செயற் மின் பொறியாளர் திரு கங்காதரன் அவர்களை தொடர்பு கொண்டு  விவரங்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் உடனே அந்த  உயர் அழுத்த மின் ட்ரான்ஸ்பார்மரை  மாற்றி அமைத்து தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது .திரு கங்காதரன் அவர்களும்  அதை உடனே மாற்றிதருவதாக உறுதி அளித்தார்.



தற்போது கீழக்கரையில் அனைத்து இடங்களிலும் புதிய உயர் அழுத்த மின் ட்ரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டு சீரான மின்  விநியோகம் நடைபெறுகிறது.கீழக்கரை நகர் நல இயக்கத்தின் அழைப்பில் எங்களோடு ஒத்துழைப்பு கொடுத்த,அணைத்து சமுதாய சமுக நல அமைப்புகள் ,அணைத்து ஜமாத்தினர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

(என்றும் மக்கள் நலப்பனியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
        (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)










No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.