தேடல்

Thursday 5 March 2015

மத்திய அரசின் செல்வ மகள் திருமணத்திட்டம்..!!


கீழக்கரை :04.03.2015

நமக்கு பொறந்தது பொன்னாபோச்சே என் பொண்ணுக்கு திருமணதிற்கு என்ன செய்வேன் என்று ஏங்கி கவலைப்பட்டவர்கள் எத்தனையோ பேர் இனி அந்த கவலை நமக்கில்லை காரணம். சுகன்ய சாம்ரிதி யோஜன திட்டம் அதாவது 
செல்வ மகள் திருமணத்திட்டம் 




இத்திட்டத்தில் பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பதிவு செய்ய தகுதியானவர்களாவர் .முதன் முறையாக ரூபாய் 1000 ஆயிரம் டெபாசிட் செய்து உங்கள் குழந்தைகளை இத் திட்டத்தில் இணைக்கலாம் அதன் பிறகு மாதம் 1000 ஆயிரம்  ரூபாய் மட்டும் செலுத்தி வரவேண்டும். இந்த தொகையை உங்கள் குழந்தை 21 வயதுவரை செலுத்தி வரவேண்டும். உங்கள் குழந்தை 21 வயதை தொட்டதும் உங்கள் குழந்தையின் திருமணதிற்கு ரூபாய் 6,50,000/ லட்சம் கிடைக்கும் .மத்திய அரசின் இந்த சிறப்பான திட்டம் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கிடைக்கும்.இது பெண் குழந்தைகளுக்கு பேருதவியாக இருக்கும் .
 மிக இலகுவான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய தேவையானவை ..!!

(1) தந்தை&தாயின்  புகைப்படம் ஒன்று , இருப்பிடம் உறுதிசெய்ய  அடையாள அட்டை ,(வாக்காளர் அடையாள அட்டை  அல்லது ஆதார் அட்டை நகல் )
 (2) பெண் குழந்தையின் பிறப்பு சான்று நகல்                                                                       
(3)1000 ரூபாய் பணம்                                                     
இந்த அனைத்து விவரங்களும் உங்கள் அருகாமையில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு அணுகவும் 
.
              (என்றும் மக்கள் நலப்பனியில் கீழக்கரை நகர் நல இயக்கம் ) 
                                  (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!)
           ( செய்தி உதவி, ஜனாப் .ஜாகிர் ஹுசைன் ,ஜனாப் ,முஜீப் ரஹ்மான்)                                  அதிகம் பகிருங்கள்                                                                                                                             

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.