தேடல்

Friday 5 June 2015

தமிழ் நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் முக்கிய அறிவிப்பு.

கீழக்கரை:03/06/2015

தமிழ் நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில மையத்தின் முடிவின் படி, உள்வட்ட அளவில் மண்டல துணை வட்டாட்சியர் பணியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகளை வலியுறித்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர், மாண்புமிகு தமிழக வருவாய்த்துறை அமைச்சர், வருவாய்த்துறை அரசு செயலாளர் மற்றும் முதன்மை ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களுக்கு 06.08.2014 அன்று நிகரிச் செய்தி அனுப்பியும், 26.08.2014 ல் மண்டல அளவிலான தர்ணா போராட்டம் நடத்தியும் 08.01.2015 அன்று மாநிலம் தழுவிய உண்ணா விரத போராட்டம் சென்னையில் நடத்தியும் கடந்த 22.01.2015 ல் ஓட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தியும் அரசு கண்டு கொள்ளாத காரணத்தால்  அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்டஆட்சித்தலைவர் அலுவலகம் முதல் வட்டாச்சியர் அலுவலகம் வரை உள்ள அனைத்து அலுவலகங்களில் பணிபுரியும் தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர் வரையிலான அலுவலர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் போராட்டம் (எதிர்வரும் 04.06.2015 மற்றும் 05.06.2015 ஆகிய இரண்டு நாட்களும் அலுவலக வேலை நேரத்திற்கு முன்பாக  மலை 1மணி நேரம் அலுவலகப் பணிகளில் இருந்து வெளிநடப்பு செய்வது என்றும் எதிர்வரும் 24.06.2015 மற்றும் 25.06.2015 ஆகிய இரண்டு தினங்கள் வேலை நிறுத்தம்) செய்வது என்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க இராமநாதபுரம் மாவட்டம் மையம் முடிவு செய்துள்ளது.



பொது மக்கள் சிரமத்தை போர்த்துக்கொண்டு எங்களது நியாயமான போராட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பு\ வழங்கும்மாறு தமிழ் நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க இராமநாதபுரம் மாவட்டம் மையம் கேட்டுக்கொள்கிறது.

என்றும் மக்கள் நல பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!!

Wednesday 3 June 2015

கீழக்கரை வடக்கு தெருவில் மின்னொளி கைப்பந்து போட்டி

கீழக்கரை:02/06/2015

வடக்குத்தெரு அல்ஜதித் கைப்பந்து கழகம் கடந்த 16 வருடங்களாக மின்னொளி கைப்பந்து போட்டியை நடத்தி வருகிறது இதன் தொடர்ச்சியாக நேற்று 01.06.2015 அன்று இரவு 8 மணியளவில் இப்போட்டி துவங்கியது 02.06.2015 அன்று இரவு இறுதிபோட்டி நடந்து முடிவடைகிறது.









இப்போட்டியை குறித்து அல்ஜதித் கைப்பந்து கழகத்தின் நிறுவனர், ஜனாப்:ஆபித் அலிஅவர்களிடம் கேட்டபோது நமது கீழக்கரை வாலிபர்கள் படித்துவிட்டு வேலைக்கு சென்று விடுகிறார்கள் இவர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் வர வேண்டும் என்ற நோக்கத்தில் 1999 ஆம் ஆண்டு அல்ஜதித் கைப்பந்து கழகம் ஆரம்பிக்கப்பட்டது, அன்றிருந்து இன்று வரை நமது கீழக்கரை இளைஞர்களை விளையாட்டு போட்டிகளில் ஊக்குவிக்கும் விதமாக இப்போட்டி வடக்குத்தெரு மணல் மேட்டில் நடத்தப்பட்டு வருகிறது, வடக்குத்தெரு ஜமாத் ஒத்துழைப்போடும் ஆதரவோடும் இப்போட்டியை நடத்தி வருகிறோம், இப்போட்டி 6 தலைமுறைகளாக நடத்தி வருகிறோம், எங்கள்  அல்ஜதித் கைப்பந்து கழகத்தில் விளையாடிய வீரர்கள் தற்போது தமிழக அளவிலும் தேசிய அளவிலும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது, அதுமட்டுமல்லாமல். எங்கள் கழகத்தின் விளையாடி சென்ற மற்ற அணியினர் வீரர்கள் தற்போது அரசு வேலையில் பனிசெய்கிறார்கள் என்பது நாங்கள் பெருமைபடக்கூடிய விஷயம், என்று கூறினார்.


02.06.2015 நடந்த இறுதி போட்டியில் ஒப்பிலான்-முஹம்மது பாய்ஸ் அணியினர் முதல் பரிசையும், மூர் கைபந்து கழகம் இரண்டாம் பரிசையும், YMCA-தூத்துக்குடி அணியினர் மூன்றாம் பரிசையும்,அல்ஜதித் கைபந்து கழகம் நான்காம் பரிசையும் பெற்றனர். இந்நிகழ்ச்சியை  அல்ஜதித் கைபந்து கழகத்தின் ஒருகினைப்பாளர் முஹம்மது அன்சாரி ஏற்பாடு செய்திருந்தார்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் 
தன் வாழ்த்துகளை தெரிவிக்கிறது.

 என்றும் மக்கள் நல பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!!