தேடல்

Saturday 9 April 2016

தொழுகை பள்ளியை திறக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் ..!!

கீழக்கரை செய்திகள்
 கீழக்கரை அருகே உள்ளது  கீழக்கிடாரம் இந்த  கிராமத்தில் சுமார் 200 குடும்பங்களுக்கு மேலே வசித்து வருகின்றனர். அனைவரும் ஒற்றுமையுடன் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும்  அங்குள்ள  ஒரே தொழுகை பள்ளியில் தொழுது  வந்தனர்.

                               ( கட்டி முடிக்கப்படாத தாசில்தார் சீல் வைத்து பூட்டப்பட்ட தொழுகை பள்ளிவாசல் )
 இதனை அடுத்து அந்த பள்ளி நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலபேர்   சீர்கேட்டால் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து அதிலிருந்து  ஒரு பகுதியினர் பிரிந்து தனியாக ஒரு ஜமாத்தை உருவாக்கி அதில் ஒரு பள்ளி  பள்ளியியையும் கட்டிவருகின்றனர். இந்த பள்ளிகட்டிவரும் இடம் அங்கு வசிக்கும் இரண்டு பெண்களுக்கு சொந்தமான இடம் அவர்கள் இந்த புதிய  பள்ளி கட்டுவதற்குப் தானமாக கொடுத்து அங்கு புதிய ஜமாத்தினர் தொழுகை  பள்ளியை  கட்டி தொழுகை  நடத்தி வந்தனர். 

  இதை தடுக்கும் நோக்கில் ஏற்க்கனெவே இருந்த பழைய ஜமாத்தினர் கடலாடி  தாசில்தாரிடம் சென்று இந்த  பள்ளி அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டது. இதற்க்கு நீங்கள் அனுமதி கொடுக்கக்கூடாது என்று கூறி அந்த அதிகாரியை கவனித்து உடனே  கடலாடி தாசில்தார் அந்த கட்டி முடிக்கபடாத  புதிய பள்ளியை  பூட்டி சீல் வைத்துவிட்டார்.

 இதனை தொடர்ந்து புதிய சுன்னத் ஜமாத்தினர் எவ்வளவோ போராடியும் அந்த பள்ளியை கடலாடி தாசில்தார் பள்ளியை திறக்க அனுமதிவழங்கவில்லை .இதனால் வெறுத்துப்போன பொதுமக்கள் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும்  மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கும் அவசர மனு ஒன்று அளித்துள்ளனர்  


                               (புதிய பள்ளியின் செயலாளர் நஜீப் கான் )
(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
 சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!