தேடல்

Friday 27 February 2015

கீழக்கரையில் கல்வித் திருவிழா..

கீழக்கரை :28/02/2015
                                  கீழக்கரை சுவாமி கிருஷ்ணானந்தா சேவா டிரஸ்ட் நடத்திய கல்வித் திருவிழாவில் கீழக்கரை மாணவ-மாணவிகள் பங்கேற்பு .


ஹுசைனியா மஹாலில் நடை பெற்ற கல்வித்திருவிழாவில் :
 பேச்சு போட்டி ,கட்டுரை போட்டி ,பொது அறிவு போட்டி ,ஓவிய போட்டிகளும்.
மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெற்றது .



     இப் போட்டியில் கீழக்கரையில் உள்ள அணைத்து பள்ளிகளில் உள்ள 500 கும்  மேற்பட்ட மாணவ மாணவிகள்  கலந்து கொண்டனர் இன் நிகழ்ச்சியை கிருஸ்னானந்தா  சேவா டிரஸ்ட் ஏற்பாடு செய்திருந்தது.

தென் மாவட்ட கராத்தே போட்டியில் ..!! கீழக்கரை மாணவர்கள் சாதனை ...!!


கீழக்கரை :27.02.2015
            தென் மாவட்ட அளவில் பரமக்குடியில்  நடந்த கராத்தே போட்டியில் கீழக்கரை பேர்ல் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள் சாதனை.
பரமக்குடியில்  நடந்த இப்போட்டியில் முஹம்மது ஹாபிஸ்  11 வயதிற்கு உட் பட்டோருக்கான  குமித்தே போட்டியில் முதல் பரிசும் ,கட்டா போட்டியில் முதல் பரிசும் பெற்றார். 12 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் ஹக்பில் மறைக்கா சீனியர் பிரிவில் குமித்தேவில் இரண்டாவது  பரிசும் கட்டாவில்  மூன்றாவது  பரிசும் பெற்றார் . வசந்த் மணிகண்டன் மற்றும் முஹம்மது ஹாமின்  கட்டா பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர் .

வெற்றி பெற்ற மாணவர்களை தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரி முதல்வர் ஜனாப ,சுமையா ,நிர்வாக மேலாளர். ஜனாப் ,ஷேக் தாவூது ,பேர்ல் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் முதல்வர் ஜனாப ,ஷாஹிரா பானு மற்றும் கராத்தே மாஸ்டர் கண்ணன் பாராட்டினார்கள்.
(புகைப்படம் உதவி கீழக்கரை தினமலர்)

கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செய்திகள் மற்றும் ஊடகப் பிரிவு துவக்கம் !

கீழக்கரை நகர் நல இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, இறைவனின் அருளால் இயக்கத்தின் மற்றுமொரு மைல் கல்லாக செய்திகள் மற்றும் ஊடகப் பிரிவு இனிதே துவங்கப்பட்டுள்ளது. 



வெளிநாடு வாழ் கீழக்கரை மக்கள் அனைவரும் பேராதரவு தந்து சமூக பணிகள் மென் மேலும் சிறக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Thursday 26 February 2015

கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக நடை பெற்ற முப்பெரும் விழா - அமைச்சர் திரு.சுந்தரராஜன் அவர்கள் பங்கேற்பு !


கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக நடைபெற்ற, மூன்றாம் ஆண்டு துவக்க விழா, சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள் வழங்கும் விழா, சிறந்த சேவை மற்றும் சாதனையாளருக்கு விருதுகள் வழங்கும் 'முப்பெரும் விழா'  நிகழ்ச்சி, நேற்று (18.08.2013) ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 மணியளவில் ஹுசைனியா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடை பெற்றது.



இந்த நிகழ்ச்சியில் முதன்மை சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணி நூல் துறைஅமைச்சர் திரு. S.சுந்தரராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக அ.இ.அ.தி.மு.க  மாவட்ட கழக செயலாளர் மற்றும் தமிழ் நாடு சேமிப்புக் கிடங்கு வாரியத் தலைவர்.திரு.G.முனியசாமி மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் திரு.G. கண்ணன் ஆகியோர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். 




இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர். செய்யது இபுறாகீம் அவர்கள் தலைமை ஏற்றிருந்தார். கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பசீர் அஹமது அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கீழக்கரை நகர் நல இயக்கத்தின் நிறுவனர். ஜனாப்.ஹமீது அப்துல் காதர் அவர்கள் அறிமுக உரை ஆற்றினார். அதனை தொடர்ந்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஜனாப்.A.அலாவுதீன், கீழக்கரை நகர் நல இயக்கத்தின் உறுப்பினரும், கீழக்கரை நகர் அ.இ.அ.தி.மு.க  செயலாளருமான திரு. இராஜேந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உரையாற்றினர். இந்த விழா நிகழ்ச்சியில் கீழக்கரை நகரில் சிறப்பான முறையில் சேவையாற்றி வரும் பொதுநல அமைப்பினர்களுக்கு சேவை விருதுகளும், சாதனை விருதுகளும், சாதனையாளர் விருதும், சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. S .சுந்தரராஜ் அவர்களிடம் கீழக்கரை நகருக்கு அவசர அவசியமாக செய்ய வேண்டிய பணிகளான, கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் புறக் காவல் நிலையம் அமைத்தல், கீழக்கரை நகரில் சுத்தம், சுகாதாரம் பேணும் நோக்கோடு வாருகால்களை உடனடியாக உயர்த்தி கட்டி மூடி போடுதல், கீழக்கரையில் தனி தாலுகா அலுவலகம் அமைத்தல், கீழக்கரை நகராட்சிக்கு மற்றுமொரு சுகாதார ஆய்வாளரை நியமித்தல், கீழக்கரை வழியாக தூத்துக்குடி மார்க்கத்தில் புதிய இரயில் தடம் அமைத்தல் உள்ளிட்டவைகளை செய்து தர வேண்டி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


இது குறித்து அமைச்சர் அவர்கள் பேசும் போது " கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக முன் மைத்திருக்கும், அனைத்து முத்தான கோரிக்கைகளும், மாண்புமிகு தமிழக முதல்வர்அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அத்தியாவசியப் பணிகள் உடனடியாக நிறைவேறித் தர வழி வகை செய்யப்படும்." என்று உறுதியளித்தார்.


விழாவின் இறுதியில் நன்றியுரையை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் துணை செயலாளர். திரு.A. செல்வ நாராயணன் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சிகளை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் துணைத் தலைவர். திரு.S.பாரதி மற்றும் உறுப்பினர் A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர்கள் தொகுத்து வழங்கினர்.

இந்த விழா ஏற்பாடுகளை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொருளாளர் A.M.ஹாஜா அனீஸ் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் அங்கத்தினர்கள் விஜயன், கெஜி உள்ளிட்ட நிர்வாகிகள், கீழக்கரை நகரிலுள்ள அனைத்து பள்ளிகளின் தாளாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியப் பெருந்தகைகள், பல்வேறு பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.