தேடல்

Sunday 13 December 2015

கீழக்கரை கடலில் தவறிவிழுந்து வாலிபர் மரணம்..!

கீழக்கரை செய்திகள் : 13-12-2015

கீழக்கரையில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் மீனாட்சி புரத்தை   சேர்ந்த சின்னசாமி,    S.N. தெருவை சேர்ந்த காசீம் மற்றும் சங்கர் ஆகிய  முன்று    நபர் களும் கீழக்கரை ஜெட்டி பாலத்திற்கு சென்றனர்.



இதில் சங்கர் என்ற வாலிபர் தவறி கடலுக்குள் விழுந்துவிட்டார் உடனே மற்ற இரண்டு நண்பர்களும் அவரை காப்பாற்றுவதற்காக கடலுக்குள் குதித்து தேடினர். நீண்ட நேரம் தேடியும் சங்கரை காணவில்லை  உடனே சலீம் மட்டும் நீந்தி கரைஏறிவிட்டார் சங்கரை தேடி சென்ற சின்னசாமியையும் காணவில்லை. மீன் பிடிப்பவர்கள் மூலம் சுமார் 1 மணி நேரம் தேடிப்பார்த்த பிறகு  கடலுக்கு அடியில் சங்கர் மற்றும் சின்னசாமியை மீட்டு கீழக்கரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இதில் சின்னசாமீ காப்பாற்றப்பட்டார், சங்கர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துவிட்டார். இது குறித்து கீழக்கரை காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் மருத்துவ முகாம் ..!! கீழக்கரை நகர் நல இயக்கம் ஏற்பாடு..!!

கீழக்கரை செய்திகள் : 13-12-2015

கடந்த சில தினங்களுக்கு முன் நமது தலை நகரை மழை வெள்ளம் புரட்டி போட்டு அதன் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கபாட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நுங்கம்பாக்கம் நிவாரண முகாம்களுக்கு சென்று வழங்கியது.





 இதன் தொடர்ச்சியாக சென்னை நகர் அணைத்து பகுதியிலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதுடன் தோற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.இதனை கருத்தில் கொண்டு நமது கீழக்கரை நகர் நல இயக்கமும்,மதுரை மீனாக்ஷி மிஷின் மருத்துவமனையும் இணைந்து .கீழக்கரை நகர் நல இயக்கத்தின் ஸ்தாபகரும்,கௌரவ ஆலோசகருமான ஜனாப் K.T.M.A.ஹமீது அப்துல் காதர் தலைமையில் .சென்னையில் புளியந்தோப்பு பகுதியில் உள்ள அரசு மாநகராட்சி தொடக்க பள்ளியில் இம் மருத்துவ முகாம் நடைபெற்றது.சுமார் ஆயிரம் பேருக்கு குழந்தை உட்பட அனைவருக்கும் மருத்துவ உதவி செய்ததுடன் மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.






இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் கௌவுரவ ஆலோசகர் ஜனாப் P.M.S.ரபீக் சாதிக் அவர்கள் கூறுகையில் சென்னையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் படும் இன்னல்களை கண்டு நமது கீழக்கரை நகர் நல இயக்கம் அங்கு சென்று  பாதிக்கபட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் அவர்ளுக்கு தேவையான பொருட்களை வழங்கியது.

அதுமட்டுமல்லாமல் நமது இயக்கமானது மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தோற்று நோய்களால் அவதிப்படும் பொதுமக்களுக்கு மதுரை மீனாக்ஷி மிஷின் மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவமுகாம் நடத்தி மருத்துவ உதவி செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது .என்று கூறினார்.


  (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )

         சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ....!!

Wednesday 9 December 2015

கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் வெள்ள நிவாரண வழங்கல் ஆலோசனை கூட்டம் ..!!

கீழக்கரை 08/12/2015

கீழக்கரை வடக்குதெரு ஜமாஅத் நிர்வாக சபை ஏற்பாடு செய்திருந்த அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் வடக்குதெரு மஸ்ஜிதுல் மன்பயி பள்ளியில் நடைபெற்றது.

இக் கூட்டத்தை அணைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் செயலாளர் ஜனாப் முஹைதீன் தம்பி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் அணைத்து ஜமாஅத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர், இது குறித்து அக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்குதெரு ஜமாத்தின் பொருளாளர் ஜனாப் அஜிஹர் அவர்களிடம் கேட்டபோது.


 சமிபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு எந்த வகையில் நமது கீழக்கரை ஜமாஅத் கூட்டமைப்பு உதவுவது குறித்து ஆலோசனை நடைபெற்றது,இந்த ஆலோசனையில் அந்தந்த ஜமாத்தார்களிடம் நிதி உதவி பெற்று சென்னையில் இயங்கிவரும் கீழக்கரை மெர்கண்டைல் அசோசியேசனக்கு வழங்கி அவர்கள் மூலமாக பாதிக்கபட்ட மக்களுக்கு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.என்று கூறினார்


 இது சம்பந்தமாக அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளும் பொதுமக்களும் வடக்குதெரு ஜமாஅத் நிர்வாக சபையின் செயலாளர் ஜனாப் முஹைதீன் இபுராஹீம்/மற்றும் மௌலா முஹய்தீன் அவர்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .CELL NO : 9688993380 / 9840943144

             (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
                                  சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!

Tuesday 8 December 2015

கீழக்கரை முஹிதீனியா கல்விகுழுமம் சார்பில் வெள்ள நிவாரணம் வழங்கல்..!!

கீழக்கரை 8/12/2015

  கீழக்கரை வடக்குதெரு ஜமாஅத் நிர்வாக சபையின் கீழ் இயங்கும் முஹிதீனியா கல்விகுழுமம் சார்பில் சென்னை மற்றும் கடலூருக்கு மழை வெள்ளத்தால் பாதிக்க பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு  வெள்ள நிவாரண பொருட்கள் சென்னையில்  தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 
 இதுகுறித்துவடக்குதெரு  முஹிதீனியா கல்விகுலுமத்தின் தாளாளர்  ஜனாப் மௌலா முஹைதீன் அவர்களிடம் கேட்டபோது


.சென்னை மற்றும் கடலூரில் பாதிக்க பட்ட மக்களுக்கு எங்களது
முஹிதீனியா கல்விகுலுமத்தின் சார்பில் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் தேவைக்கு அரிசி,பருப்பு,போர்வை ,போன்றவை ST கொரியர் மூலம் அனுப்பிவைக்கபட்டது என்று கூறினார்.


இந் நிகழ்வில் முஹிதீனியா கல்விகுலுமத்தின் துணைத்தலைவர் ஜனாப் முஹைதீன் இபுராஹீம்,துணை செயலாளர்,ஜனாப் அஹமது மிர்சா,செயலாளர் மருத்துவர் ராசிக்தீன்,பொருளாளர்,சேகு பஷீர் அஹமது,பள்ளியின் முதல்வர் .நிலோபர்நிஷா,மற்றும் துணை முதல்வர் ரகுநாத சேதுபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.




(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!

Monday 7 December 2015

கீழக்கரை அருகே கம்மாய்க்குள் அரசு பேருந்து கவிழ்ந்தது..!

கீழக்கரை செய்திகள் : 07-12-2015

இராமேஸ்வரத்திலிருந்து பாபநாசம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து காஞ்சிரங்குடி அருகே உள்ள பாலையாறு கம்மாய்க்குள் 40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் கவிழ்ந்தது.





உடனே தகவலறிந்து வந்த கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் காயமடைந்த பயணிகளை மீட்டு கீழக்கரை அரசு பொது மருத்துவமனைக்கும், ராமநாதபுரம் அரசு பொது மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர் .



























வேறு எதாவது பயணிகள் பஸ் அடியில் சிக்கி கொண்டு இருக்கிறர்களா...? என்று அச்சம் நிலவுகிறது. இதனை அடுத்து தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் கீரேன் உதவியுடன் பேருந்தை அப்புற படுத்த போராடி வருகின்றனர்.

(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)                  
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!

Friday 4 December 2015

சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் நிவாரணம் ..!!

கீழக்கரை செய்திகள் 04/12/2015


    சென்னையில் கடந்த நாட்களாக மழை பெய்து அதன் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

 மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அணைத்து சமுதாயமக்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.இதனை அடுத்து கீழக்கரை நகர் நல இயக்கமும் பாதிக்க பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு

    கீழக்கரை நகர் நல இயக்கத்தின் ஸ்தாபகர் K.T.M.A.ஹமீது அப்துல் காதர் அவர்களும், .அவர்களுடைய குடும்பத்தார்களும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை,லுங்கி,சேலை,வேட்டி,மற்றும் உணவுகள் வழங்கினார்கள்.

 (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
                  சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!

Thursday 3 December 2015

கீழக்கரையில் மின்தடை.

கீழக்கரை செய்திகள் : 04-12-2015


கீழக்கரையில் மாதாந்திர மின்பராமரிப்பு மேம்பாடு செய்வதினால் நாளை (05-12-2015) சனிகிழமை அன்று காலை 9 மணி முதல் 5 மணிவரை மின்சாரம் தடை செய்யப்படும் என்பதை ராமநாதபுரம் உதவி மின் செயற் பொறியாளர்  திரு .கங்காதரன் தெரிவித்தார்.

(என்றும் மக்கள் நல பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!!