தேடல்

Monday 30 March 2015

கீழக்கரையில் அம்மா மருத்துவ காப்பிட்டு திட்டம் முகாம் .!

கீழக்கரை: 30.03.2015

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அரசு மருத்துவமனையில் செயல்பட்டுவரும், அம்மா மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம் நாளை  1.04.2015 (புதன்கிழமை) அன்று கீழக்கரை உசைனியா கல்யாண மஹாலில் நடைபெறுவதால் இம்மருத்துவமுகாமை பற்றி கீழக்கரை அரசு மருத்துவர் திரு.ராஜ் மோகன், ஜனாப்.ஜவாஹிர் ஹுசைன் அவர்களிடம் கேட்டபோது.

இருதயநோய்:
குழந்தைகளுக்கு ஏற்படும் இருதயநோய், பெரியவர்களுக்கு ஏற்படும் இருதய மாரடைப்பு ஆகிய நோய்களைகண்டறிய ECHO,ஆஞ்சியோகிராம் போன்ற பரிசோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, இருதயநோய்க்கான அறுவை சிகிச்சை மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி பைபாஸ் ஆபரேசன் ஆகியவற்றிக்கு உடனடியாக இம்முகாமிலிருந்து பரிந்துரைசெய்யப்படும்.



கர்ப்பப்பைநோய்:
 கர்ப்பப்பைகட்டி, கர்ப்பப்பைஇறக்கம் போன்ற கர்ப்பப்பை சம்மந்தமான அனைத்து வியாதிகளுக்கும் அறுவைசிகிச்சை செய்ய கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்படும்

குடலிறக்கம்:
குடலடைப்பு போன்ற நோய்களுக்கு அறுவைசிகிச்சை செய்ய கீழக்கரை அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்படும்.
மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறிவதற்கு இம்முகாமிலிருந்து உடனடியாக பரிந்துரைசெய்யப்படும்.

மார்பக புற்றுநோய் கண்டறியும் (Mamogram) ஸ்கேன்கள் எடுக்கவும், இம்முகாமிலிருந்து உடனடியாக பரிந்துரைசெய்யப்படும்.

புற்றுநோய் சம்மந்தமான பெரிய அறுவைசிகிச்சைகள் கதிரியக்கசிகிச்சை முறையில் செய்ய இம்முகாமிலிருந்து உடனடியாக பரிந்துரைசெய்யப்படும்.
பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும், ஆஸ்துமா, நிமோனியா, சளி போன்றவற்றிக்கு இம்முகாமிலிருந்து உடனடியாக பரிந்துரைசெய்யப்படும்.
இம்மருத்துவமுகாமில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரத்தகொதிப்பு மற்றும் சர்க்கரை அளவு ஆகியவைகள் பரிசோதனை செய்யப்பட்டு கட்டுப்படாத சர்க்கரைவியாதிகளுக்கு கீழக்கரை அரசு மருத்துவமனையில் உள்நோயளியாக அம்மா வார்டில் அனுமதிக்கப்பட்டு உரியசிகிச்சைகள் வழங்கப்படும்.

மஞ்சள்காமாலை நோய்க்கு அனைத்து பரிசோதனைகளும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டு உள்நோயளியாக அம்மா வார்டில் அனுமதிக்கப்பட்டு உரியசிகிச்சைகள் வழங்கப்படும்.
இம்ருத்துவமுகாமில் MRI,CT போன்ற ஸ்கேன்கள் எடுக்க பரிந்துரை செய்யப்படும்.



இம்மருத்துவ முகாமிற்கு வரும் பொதுமக்கள் குடும்பஅட்டை மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டை கொண்டுவந்து பயன்பெற்று கொள்ளலாம் என்று கூறினார்கள்.
               (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
                                      (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.