தேடல்

Thursday 19 November 2015

இரங்கல் அறிவிப்பு ......!!

கீழக்கரை செய்திகள்:20/11/2015

 கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த ஹமீதியா பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் தாளாளரும்,யூசுப் சுலைகா மருத்துவமனையின் இயக்குனரும், கீழக்கரையின் மூத்த மருத்துவருமான ஹாஜி , DR.செய்யது அப்துல் காதர் அவர்கள் நேற்று  வபாத்தாகிவிட்டார்கள்.
                    இன்னா னில்லாஹி வா இன்னா இலைஹி ராஜவூன்

அன்னாரை இழந்து வாடும் அவருடைய  குடும்பத்தார்ளுக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது .


புகைப்பட உதவி (நன்றி.கீழக்கரை டைம்ஸ்)                                                               


(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!! 



Tuesday 17 November 2015

கீழக்கரையில் நாளை (18-11-2015) குறிப்பிட்ட இடங்களில் மின்சார தடை..!

கீழக்கரை செய்திகள்: 17-11-2015

நாளை (18-11-2015) பழுதைடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் நிலை நிறுத்தப்படுவதால் நாளை காலை  9 மணி முதல் மாலை 5 மணி வரை  குறிப்பிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் மின்விநியோகம் இருக்காது. என்பதை கீழக்கரை உதவி மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.


மின்சார நிறுத்தப்படும் இடங்கள்:
  1. ஓடக்கரைப் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகள்,
  2. உமர் ஐஸ் பிளான்ட்,லைட் ஹவுஸ் சுற்றியுள்ள பகுதிகள்,
  3. கஜினி டி கடையை சுற்றியுள்ள பகுதிகள்,
  4. சங்கு வெட்டித் தெருவை சுற்றியுள்ள பகுதிகள்,
  5. மேலத் தெருவை சுற்றியுள்ள பகுதிகள்,

சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!!
 (என்றும் மக்கள் நல பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)



Monday 16 November 2015

கீழக்கரையில் அறிவியல் கண்காட்சி அசத்திய மாணவ மாணவிகள் ..!

கீழக்கரை செய்திகள் :15.11.2015

  கீழக்கரை சீதக்காதி அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் பேர்ல் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் கடந்த வாரம் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது .இக் கண்காட்சியை ராமநாதபுரம் நேஷனல்  பள்ளியின் ஆலோசகர் சங்கரலிங்கம் தொடங்கிவைத்து  தலைமை வகித்தார்.

    இப் பள்ளியின் முதல்வர் திருமதி ஷாஹிரா அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார் இதில் இங்கு பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அனைவரும் பார்வையாளராக கலந்துகொண்டனர் .


  நான்காம் வகுப்பிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளின் தங்களின் அறிவியல் ,சுற்றுசூழல் ,புவிவெப்பமயமாகுதல் ,இஸ்லாம் ,சமுக அறிவியல் ,போன்ற படைப்புகளை படைத்து செய்து காட்டினர்.


இதில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவன் ஹக்பில் மறைக்கா  செய்து காட்டிய நிலநடுக்கத்தை முன்கூட்டியே எப்படி கண்டுபிடிப்பது எப்படி என்று  மாதிரியை  அனைவரையும் கவர்வதாக அமைந்தது.
  இதன் செயலாக்கத்தை பற்றி அங்கு நடுவர்களாக வந்திருந்த செயயதம்மாள் பள்ளியின் ஆசிரியர்கள் திரு வெங்கடேஷ்,திரு பாலமுரளி. ஆகியோர் அம்  மாணவனிடம் கேட்டபோது. 


நாம் தற்போது பயன்படுத்தும் செல் போனிலிருந்து வரும் கதிர்வலைகள்.செல்போன் அடிக்கும் முன்னே டிவி , அருகேயோ ரேடியோ அருகேயோ கொண்டுசென்றால் அதன் இயக்கம் தடைபடும் பின்னர் தான் செல்போன் மணியடிக்கும்.இதை அடிப்படையாக கொண்டு இந்த அதி சக்திவாய்ந்த கதிர்வலைகள்  கருவியை நாம் உண்டாக்கி எந்த இடத்தில் அதிகம் நிலநடுக்கம் நேர் கோட்டில் உணரப்படுகிறதோ அங்கு இந்த கதிர்வலைகள் கருவியை பூமியிக்கடியில் வைத்தால்.உதாரணமாக நிலநடுக்கம் என்பது ஒரு நொடிக்கு 14 கிலோமீட்டர் கடக்கக்கூடியது சென்னையில் நிலநடுக்கம் உணரப்பட்டால்  அதன் தொடர்ச்சி நமதூருக்கு வருவதற்கு 39 நொடிகள் ஆகும் அதற்குள் அதிவேக கதிர்வலைகள் கருவி மூலம் அலாரம் அடிக்க தொடங்கிவிடும்.நாம் உடனே பாதுகாப்பான இடத்திற்கு சென்று  நம்மை   பாதுகாத்துகொள்ளலாம் என்று கூறினான்.


  மற்றொரு ஏழாம் வகுப்பில் படிக்கும் மாணவி லிப்திகாவிடம் கேட்டபோது தற்போது  நமது நாடு உள்ள நிலைமையில் சுற்றுப்புறச்சூழ்நிலையில் பயோ கேஸ் மிக அத்தியாவிசயம் ஆகிவிட்டது.இதை இயற்கை சூழ்நிலையில் இருந்தும்,கழிவுகளிலிருந்தும் தயாரிக்கலாம் என்று கூறினார். இந்த இரு மாணவ மாணவியின் அறிவியல் படைப்புகள் .சிறப்பு பரிசை பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  இந்த  அறிவியல் கண்காட்சியை குறித்து பேர்ல் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு நடுவர்களாக வந்திருந்த செய்யதம்மாள் பள்ளியின் ஆசிரியர்களிடம் கேட்டபோது இங்கு அறிவியல் கண்காட்சி மட்டுமல்லாமல்,சுகாதாரம் சுற்றுப்புறசூழல்,சமுக அறிவியல்.இஸ்லாம்,குறித்த அத்துனை விஷயங்களும் மாணவ மாணவிகள் அனைவரும் அழகாக தன் படைப்புகளை உண்டாக்கி இருந்தனர்,என்று கூறினார்கள்.
  அறிவியல் கண்காட்சியின் நிறைவில் ஆசிரியை திருமதி  சூர்யா நன்றி கூறினார்  

   இன் நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கும், மற்றும் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட அனைவரையும் கீழக்கரை நகர் நல இயக்கம் தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
 
   (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
                 ( சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!)

Sunday 15 November 2015

கீழக்கரையில் பிரியாணி அதிரடி விலை குறைப்பு .! போட்டா போட்டி..?

கீழக்கரை செய்திகள்:15.11.2015

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் எராளமான உணவு விடுதிகள் உள்ளன. பலதரப்பட்ட தேநீர் விடுதிகளும் உள்ளன. ஆனால் தற்போது  புற்றீசல் போலே ஆங்காங்கே பாஸ்ட்புட்  துரிதவகை உணவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது .



 தற்போது வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள கடைகளில் முன்பு 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிக்கன் பிரியாணி,தற்போது 40 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட மீன் சாப்பாடு தற்போது 20 ரூபாய்க்கும்  தங்களுடைய வியாபாரம் பெருக போட்டி போட்டு கொண்டு விற்பனை செய்து வருகிறார்கள்.




இது குறித்து வள்ளல் சீதக்காதி சாலையில்  இரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வரும் ஜனாப் இபுராஹீம் அவர்களிடம் கேட்டபோது இப்போது இவர்களிடம் போட்டா  போட்டி நடந்து வருகிறது. இது ஆரோக்கியமான விஷயம் இல்லை. . இது பொறாமையில் கொண்டு சென்றுவிடும்.என்றாலும் இவர்களுடைய போட்டி ஏழை எளிய மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.என்பதில் ஐய்யமில்லை.என்று கூறினார்.



   (  என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம், )
                            சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!

Friday 13 November 2015

இறந்தபின் தான் வேலை பார்த்த பள்ளிக்கே நன்கொடை கொடுத்த மோதினார் (முஅத்தின்)..!

கீழக்கரை செய்திகள் 14/11/2015

  கீழக்கரை வடக்குதெரு ஜமாத்திற்கு சொந்தமான மஸ்ஜிதுல் மன்பயி பள்ளிவாசலில் கடந்த இருபத்தைந்து வருடங்களா முஅத்தின்னாக (மோதினாரக) பணிபுரிந்துவரும் அப்துல் கரீம் அவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வபாதகிவிட்டர்கள்.

                                 
 மறைந்த மர்ஹூம் ஹாஜி. அப்துல் கரீம் 


  அவர்கள் மரணிக்கும் தருவாயில் தன் உடல் நிலைமை சரியில்லாத நிலைமையில் தன மனைவியிடம் தான் வேலை பார்த்த பள்ளிவாசலுக்கு தான் 25 வருடங்களாக சேமித்து வைத்த 21 பவுன் நகைகளை  என்னுடைய மரனத்திற்கு பின் வடக்குதெரு ஜாமத்தில் ஒப்படைத்து விடுமாறு (வசியத்) கூறிவிட்டு சிறிது நாட்களில் இறந்துவிட்டார்கள்.


இதனை அடுத்து அவருடைய மனைவி சிறிது நாட்கள் கழித்து அந்த நகைகளை வடக்குதெரு ஜமாஅத் தலைவர் ஜனாப் அக்பர் கான், செயலாளர் ஜனாப். முகைதீன்  இபுராஹீம், உறுப்பினர்கள் அஹமது நிசார். ஆகியோர்களிடம் ஒப்படைத்தார்கள்.


 அந்த நகைகளின் அன்றைய மதிப்பு ரூபாய் :2,87,986/- ஆகும்.


        நமதூர் கொடைவள்ளல்களும் செல்வந்தர்களும் வாழும் இந்த மண்ணில் சாதாரண மனிதனாக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து இறைவன் இறை இல்லத்தில் முஅத்தினாக பணிபுரிந்து மறைந்த அப்துல் கரீம் அவர்கள் நாம் வாழும் இக் காலத்தில் செத்தும் கொடைகொடுத்த வள்ளல் அப்துல் கரீம் என்ற நல்ல மனிதர் நம்முடைய அனைவருடைய நெஞ்சிலும் நீங்க இடம்பிடித்திருப்பர் என்பதில் ஐய்யமில்லை.

  (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )


     சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!