தேடல்

Thursday 30 April 2015

பணி ஓய்வுபெற்ற நகராட்சி ஊழியருக்கு பாராட்டுவிழா.

கீழக்கரை : 30/05/2014

கீழக்கரை நகராட்சியில்,கடந்த 35 து   வருடங்களாக சிறப்புடன் துப்பரவுப் பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற திருமதி.கூரியம்மாள் அவர்களுக்குபிரிவு உபச்சார விழா  நமது கீழக்கரை நகராட்சியில் நடைபெற்றது.


இதுகுறித்து 5 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜனாப்.சாகுல் ஹமீது அவர்களிடம் கேட்டபோது திருமதி.கூரியம்மாள் அவர்கள் 1986 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து மிகவும்,நல்ல முறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
இவரை கௌரவிக்கும் விதமாக பிரிவு உபச்சார விழாவில் நமது நகராட்சி சேர்மன் மற்றும் நகராட்சி ஆணையாளர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் என்று கூறினார்.



நமது நகராட்சியில் சிறப்புடன் பணியாற்றி ஓய்வுபெற்ற திருமதி.கூரியம்மாள் அவர்களை கீழக்கரை நகர் நல இயக்கம் வாழ்த்துகிறது.

           (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
                          (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!)

Wednesday 29 April 2015

கீழக்கரையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..

கீழக்கரை: 29/04/2015

தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை வழிவுறுத்தி, கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார்.செய்யது முகம்மது தலைமையேற்றுஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார், விளக்கவுறை.ஜமால் முகம்மது, மண்டல துணை வட்டாச்சியர், சிறப்புறை.தமிழ்ராஜா மாவட்ட செயலாளர் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம். மற்றும் வட்ட கிளை தலைவர் .முருகன் தாலுக் பிரசிடன்ட். தெய்வராஜ் செயலாளர் தாலுக். சாமிநாதன் பொருளாளர் தாலுக். மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

(என்றும் மக்கள் பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக...!!

ஜனாஸா அறிவிப்பு...

கீழக்கரை : 29/04/2015


நமது கிழக்குத்தெரு ஜமாஅத்தைச் சேர்ந்த மர்ஹூம்.E.S.S.சேகு ஜலாலுதீன் அவர்களின் மகனும் மர்ஹூம்.P.M.S.முகம்மது காசிம் அவர்களின் மருமகனும்
P.M.S.நூர் ரஹீம் அவர்களின் மச்சானும், E.S.S.நூர் முகம்மது, E.S.S.சுல்த்தான் செய்யது இபுறாஹீம் இவர்களின் சகோததரரும்,ஹமீது ரியாஸ்,ஹம்சியத் ஹசிபா,ஜாசிம் ஜலால் ஆகியோர்களின் தகப்பனாரும், ஃபாய்ஸ் அகமது அவர்களின் மாமனாரும்,செய்யது இஸ்மாயில் நாச்சி அவர்களின் கணவருமான சின்ன மாப்பிள்ளை என்ற ஹாஜி.செய்யது அப்துல் காதர் அவர்கள் இன்று காலை சுமார் 7.00 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

                           (இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்)

அன்னாரின் ஜனாஸா சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நாளை (30/04/2014)  8.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

செய்தி உதவி : ஹஜிகர் (கிழக்கு தெரு)

Wednesday 22 April 2015

கீழக்கரையில் நள்ளிரவில் வழிப்பறி.

கீழக்கரை 22/04/2015


கீழக்கரையில் 22/04/15 நள்ளிரவு சுமார் 1 மணியளவில் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை கிழக்குத்தெரு செல்லும் வழியில் உள்ள சிட்டி யூனியன் தனியார் வங்கியில்  பணிபுரியும் ATM மிஷன் இரவு காவலாளி பழனி வயது (40), இரவு 1 மணியளவில் காவல் பணிபுரியும் பொழுது இருவர் அவரை தாக்கி சட்டை பையில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர்.


உடனே. காவலாளி பழனி கீழக்கரை காவல் நிலையத்திற்கு சென்று அங்கே இரவு பணியில் இருந்த துணை ஆய்வாளர் சிவசுப்ரமணியம் அவரிடம் நடந்த சம்பவத்தை கூறினார்.

      (கீழக்கரை காவல் நிலைய துணை ஆய்வாளர் சிவசுப்ரமணியம்)

இதனை அடுத்து துணை ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறியில் ஈடுபட்டது கிழக்குதெருவைச் சார்ந்த நபர்கள் என தெரியவந்தது இருவரையும் துணை ஆய்வாளர் கைது செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

(என்றும் மக்கள் நல பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!!

Monday 20 April 2015

கீழக்கரை அருகே வாகன விபத்து.

கீழக்கரை:21/4/2015

இன்று காலை 7.30 மணியளவில் கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம் நோக்கி சென்ற சரக்கு லாரியும், இராமநாதபுரத்திலிருந்து  தூத்துக்குடி நோக்கி வந்த சரக்கு லாரியும் காஞ்சிரங்குடி பஸ்டாப் விளக்கு அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு லாரி ஓட்டுனர்களும் படுகாயம் அடைந்தனர்..




அங்கு இருந்தவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்,  108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயம் அடைந்த லாரி ஓட்டுனர்களை இராமநாதபுரம் அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டனர்..



இதுகுறித்து கீழக்கரை காவல்துறை துணை ஆய்வாளர் சிவசுப்ரமணியம் தலைமையில் விசாரணை நடந்துவருகிறது.

புகைப்பட உதவி  :  சதாம் உசேன்
செய்தி உதவி        :  முசம்மில் உசேன் (தெற்குதெரு)

(என்றும் மக்கள் நல பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக...!!

Saturday 18 April 2015

கீழக்கரை மக்களே..! உஷாரய்யா...!! உஷாரு....!!!

கீழக்கரை:18/4/2015

விரைவாக அனைவருக்கும் பகிர்ந்து தமிழக மக்கள் அனைவரும் விழிப்படைய செய்யுங்கள் உங்களது.2,80,00,000 ரூபாய் ஊழலை தடுத்திடுங்கள்.


உஷாரய்யா உஷாரு தமிழகத்தில் பழைய மின்சார மீட்டர்களுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு மாற்றபடும் டிஜிட்டல் மீட்டர்களுக்கு யாரும் கட்டணம் செலுத்த தேவையில்லை,நமது வசத்திக்காக டிஜிடல் மீட்டர் பொருத்தப்படவில்லை வாரியத்தின் வசதிக்காக பொருத்தப்படுகின்றது.கொடுத்தால்தான் மீட்டர் புதிய மீட்டர் பொருத்துவோம் என்று சொன்னால் தாராளமாக வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்.பணம் கேட்டால் அவரது பெயர் அடையாள அட்டையில் இருக்கும் குறிப்பிட்டு அருகில் உள்ள EE அவர்களுக்கு,AE அவர்களுக்கு,CE அவர்களுக்கு புகார் அளிக்கலாம்.மீட்டர் பொருத்த வரும் பணியாளரிடம் அடையாள அட்டை கேளுங்கள் இருந்தால் அனுமதியுங்கள் இல்லையேல் திருப்பி அனுப்பிவிடுங்கள்.

EE அவர்களும் உடந்தையாக இருந்து வசூலித்தால் EB விஜிலன்சுக்கு உடனடியாக புகார் அளிக்கவும்.
விஜிலன்ஸ் முகவரி EB VIGILANCE
Tamil Nadu Electricity Board Ltd., Anna salai, Opp LIC Office, Ch-2.
Ph. :044 -28520416 Fax:044-28520749 Ph. :044-28412753

Fax:044-28522837

(என்றும் மக்கள் பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!

Friday 17 April 2015

கீழக்கரையில் இலவச மருத்துவமுகாம் ..!

கீழக்கரை 18.04.2015

 
  கீழக்கரையில் வருகின்ற 19.04.2015 அன்று ஞாயற்று கிழமை கீழக்கரை ரோட்டரி  சங்கம். மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச சர்க்கரை நோய், மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான  கண் (விழித்திரை) பரிசோதனை  முகாம் கிழக்குதெரு கைராத்துல் ஜலாலியா  மேல்நிலை பள்ளி வளாகத்தில் காலை 9  மணிமுதல் பகல் 1 ஒருமணிவரை  நடைபெறஉள்ளது. இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு  அனைவரும் பயன்பெற்றுகொள்ளுமாறு கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

         (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
                               (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)

Thursday 16 April 2015

இராமநாதபுரம் அருகே வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு .!

கீழக்கரை 16.04.2015
   இன்று சுமார் ஐந்து மணியளவில் இராமநாதபுரத்தில் இருந்து கமுதி நோக்கி சென்றுகொண்டிருந்த  நான்கு சக்கர இண்டிக்கா காரும் ராமநாதபுரம் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இண்டிக்கா காரின் வாகன ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


     அந்த காரில் பயணம் செய்த இருவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தனியார் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த ஒரு சில மாணவிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.




இது குறித்து ராமநாதபுரம் காவல் துறையினர் விசாரணை செய்துவருகிறார்கள் .

                       (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
                                                 (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)

Wednesday 8 April 2015

ஜனாஸா அறிவிப்பு...!

கீழக்கரை:08/04/2015


கிழக்குத்தெரு ஜமாஅத்தைச் சேர்ந்த மர்ஹும் செ.மு.முஹம்மது முஹைதீன் அவர்களின் மகனும் மர்ஹும்  செய்யது இஸ்மாயில் ஹாஜியார் அவர்களின் மருமகனும், செய்யது ஹாமிது.மர்ஹும் M.பாரூக், M.செய்யது அபுதாகிர் ஆகியோர்களின் சகோததரரும், M.S.அஜிஸா பீவி அவர்களின் கணவரும், முஹம்மது நஹீம், முஹம்மது அமீன், நிலோபர்தீன் ஆகியோரின் தகப்பானரும், S.முஹம்மது ரபீக், M.S.பசருல் ஹக் ஆகியோரின் மாமாவும், மர்ஹும் சன்சைன் முஹம்மது முஹம்மது சதக்தம்பி அவர்களின் மச்சானுமான பித்தளைகட்டி (எ) ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் இன்று காலை 10.15 மணியளவில் வாபத்தாகிவிட்டார்கள்.
(இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்)

செய்தி உதவி: ஹஜிகர் (கிழக்குத்தெரு)

Monday 6 April 2015

பெருநாள் வந்தாச்சு பொட்டணி (துணி) வியாபாரம் துவங்கியாச்சி.!

கீழக்கரை:06.04.2015
  நூறு வருடங்களுக்கு முன்பாகவே நமதூர் கீழக்கரைக்கு பொட்டணி துணி வியாபாரம் ஆரம்பம் ஆகிவிட்டது. நாம் சிறு வயது முதலே கண்டதுதான்.

  கடந்த ஆண்டுகளில் தலையில் பொட்டணி சுமந்து அந்த பொட்டனிக்குள் தலைசுமை துணிகளை வைத்து கொண்டு வருவார்கள். முன்பு  வாகன வசதி இல்லாத காலங்களில்.வசதி வாய்ப்பு இல்லாத ஏழைகள் இந்த தலைசுமை பொட்டணி துணிகளை  வாங்குவார்கள்.

   
       தற்போது மூன்று தலைமுறைகளாக கீழக்கரையில் வியாபாரம் செய்து வரும் திரு மனோகரன் அவர்களிடம் கேட்டபோது. நான் கடந்த 35 வருடங்களாக இந்த வியாபாரத்தை செய்துவருகிறேன்.முதலில் எனது தாத்தாதான்  100 வருடங்களுக்கு முன்பு கீழக்கரைக்கு தலைசுமை வியாபாரத்தை துவங்கினார்.பின்பு எனது அப்பா,எனது அப்பாவிற்கு பிறகு நான் இந்த வியாபாரம் இந்த ஊரில் செய்து வருகிறேன்.



     நாங்கள் மொத்தம் 90 மேற்ப்பட்டவர்கள் இருக்கிறோம் எங்களது சொந்த ஊர் தூத்துக்குடி அருகில் விளாத்திகுளம் நாங்கள் பெருநாளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக இந்த ஊருக்கு வந்துவிடுவோம்.இங்கேயே தங்கி வியாபாரத்தை துவக்குவோம்.


    இந்த ஊர் மக்கள் எங்களோடு மிக அன்பாக பழகக்கூடியவர்கள். நாங்களும் மாமி, மாமா என்றுதான் அன்போடு அழைப்போம்.எங்களோடு வருபவர்கள் யாரவது தப்புகள் செய்தால் அவர்களை நாங்கள் மீண்டும் கீழக்கரைக்கு அழைத்து வரமாட்டோம்.என்று கூறினார்.

  நமதூரை நம்பி வந்து பிழைப்பு நடத்தும் இவர்களை வாருங்கள் நாமும் வாழ்த்துவோம்.இவர்கள் வியாபாரம் சிறந்து விளங்க..!

  (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
          (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...!!)

கீழக்கரையில் "அதிரடி" வாகன சோதனை...!


கீழக்கரை: 6/4/2015

கீழக்கரையில்  இன்று  முக்குரோட்டில்  வாகன  சோதனை   நடைபெற்றது, 
இதில் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும்,வாகன பதிவு சான்றிதழ்  இல்லாமலும்,காப்பீட்டு சான்றிதழ் இல்லாமல் ஒட்டிய  வாகன உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது.


   இது குறித்து கீழக்கரை காவல்துறை துறை இணை ஆய்வாளர் திரு சிவசுப்ரமணியன், B.Sc,அவர்களிடம் கேட்டபோது . சென்னையில் சுமார் 150 இருசக்கர வாகனங்கள் திருடி ராமநாதபுரம் மாவட்டத்தில் அந்த வண்டியை விற்றதாக எங்களுக்கு தகவல் வந்ததை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது. 


 இந்த சோதனையின் போது 18 வயதுகூட  பூர்த்தியாகமல் சிறுவர்கள் கூட இருசக்கர வாகனத்தை ஒட்டிசெல்கிரர்கள் பெற்றோர்களும் இதற்க்கு உடந்தையாக இருக்கிறார்கள்.இவர்களை பெற்றோர்கள் தான் கண்டிக்கவேண்டும்.என்று கூறினார். 
  இதுபோன்ற அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் கீழக்கரை துணை ஆய்வாளர்  திரு சிவசுப்ரமணியன்,மற்றும் P.S,முனியாண்டி அவர்களை கீழக்கரை நகர் நல இயக்கம் வாழ்த்துகிறது.

  (என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
              (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக..!)

Sunday 5 April 2015

கீழக்கரையில் சுகாதாரமான குடிநீரா..? நகராட்சி ஆய்வு மேற்கொள்ளவேண்டும்,மக்கள் கோரிக்கை ..!!

கீழக்கரை.05.04.2015
        இராமநாதபுரம் மாவட்டத்தை தண்ணீர் இல்லா காடு என பல்லாண்டு காலமாக பலர் பேச்சு வழக்கில் கூறுவதை பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் நமதூர் தனவந்தர்களும், செல்வந்தர்களும், கொடைவள்ளல்களும் , வாழும் சிறப்பான கீர்த்திமிகு கீழக்கரையில் ....?

         இவ்வளவு பெயருக்கும் சொந்தக்காரர்களான நாம் இன்னும் தண்ணீரை காசுகொடுத்துத்தான் வாங்கவேண்டிய அவல நிலை. இருந்தும் நாம் குடிப்பது சுகாதாரமான குடிநீரா..?


இது குறித்து கீழக்கரை சமுக ஆர்வலரும் சமுக சேவையில் அக்கறை உள்ளவருமான ஜனாப் அல்லாபக்ஸ்.அவர்கள் கூறும் போது

நம் கீழக்கரை நகரத்தில் ஆண்டாண்டு காலமாக  முதன்முதலாக கடைகளில்தான் தகர டப்பாக்களில் ( துருபிடித்த) தண்ணீர் ஊற்றுவார்கள். அந்த டப்பாவிலே. நாம் என்றாவது இது ஏன் இப்படி இருக்கிறது என்று கேட்டிருப்போமா அல்லது நகராட்சி தான் கேட்டிருக்குமா ?

   தற்போது தண்ணீர் விநியோகம் செய்யும் மாட்டுவண்டிகள் ,தண்ணீர் டேங்கர் லாரிகள்,குட்டியானை பிளாஸ்டிக் கேன்கள், இவை யாவும் முறையாக பராமரிக்கப்பட்டு நமது "கீழக்கரை நகராட்சி அனுமதியோடுதான்" விநியோகம் செய்கிறார்களா.


 இல்லை அனுமதி இல்லாமலும், சுத்தம் இல்லாமலும்,விற்பனைசெய்யபடுகிறதா. இதை நகராட்சி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதா. மாதம் ஒருமுறை  தண்ணீர் விற்பனை செய்யும் டேங்கர் லாரிகளை குளோரினால் சுத்தம் செய்து சுகாதார அதிகாரிகளிடம் தகுதி சான்று பெறவேண்டும்.


  ஆனால் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல்  தண்ணீர் டேங்கர் லாரிகள்,மாட்டுவண்டிகள்,பல வருடங்களாக சுத்தம் செய்யாமல் அப்படியே மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்கிறார்கள்.சுகாதாரமற்ற குடிநீரை அருந்துவதால் மக்கள் பல இன்னல்களுக்கு ,கிருமி காய்ச்சல்.நிமோனியா,டைபாய்டு,காலரா ,போன்ற பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.


இதை முறையாக பராமரிக்க கீழக்கரை நகராட்சி அதிரடியாக கீழக்கரையில்  தண்ணீர் விற்பனை செய்யும் தண்ணீர் டேங்கர் லாரிகள்,மாட்டு வண்டிகள்,குட்டியானை பிளாஸ்டிக் கேன்கள்.மற்றும் மினரல் வாட்டர் கேன்கள்.  போன்றவைகளை அதிரடியாக சோதனை செய்து தவறு செய்தவர்களை தண்டிக்கவேண்டும்.
  கீழக்கரை நமதூர் மக்கள் சுகாதாரமான குடிநீரை குடிக்க கீழக்கரை நகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
            (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!)

Saturday 4 April 2015

கீழக்கரை மக்களின் "ரயில்" கனவு நிறைவேறுமா ?

காரைக்குடி - இராமநாதபுரம் - ‪#‎கீழக்கரை‬ - தூத்துக்குடி - கன்னியாகுமரி. புதிய ரயில்வே இருப்புபாதை போடுவது குறித்து 2008 ஆம் ஆண்டு ரயில்வே இலாகா பரிசீலித்து அதே ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் ஆறிவிப்பு வெளியிட்டது.


ஓய்வு பெற்ற ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் M.M.S.செய்யது பஇபுராஹீம் அவர்கள் உருவாக்கிய காரைக்குடி கன்னியாகுமரி புதிய இருப்புபதை வரைபடம். 

சர்வே முதலில் ,இராமநாதபுரம் - தூத்துக்குடி மார்க்கத்தில் தொடங்கியது அதன் பின் ரயில்வே நிரவகம் உத்தரவின்பேரில் காரைக்குடி - இராமநாதபுரம் - தூத்துக்குடி - கன்னியாகுமரி பாதையும் சர்வே செய்யப்பட்டது.
 
காரைக்குடி முதல் - கன்னியாகுமரி சர்வே பணிகள் 2011 ல் முடிந்தது அதற்கான ஆய்வறிக்கை,வரைபடங்கள் மற்றும் செலவாகும் தொகை இவற்றை கணித்து தெற்கு ரயில்வே அறிக்கையை 2011 ஆம் ஆண்டு ரயில்வே போர்டுக்கும் சமர்ப்பித்து.
2008 ஆம் ஆண்டு ஆரம்பமமான இப்பிரச்சனை சென்ற ஆறு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.




இது குறித்து #‎கீழக்கரை_நகர்_நல_இயக்கம்‬... &‪#‎சமூக_நுகர்வோர்_சேவை_இயக்கமும்‬...இணைந்து இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை அணுகி ஆவன புரியுமாறு கேட்டுகொண்டது, இதன் விளைவாக இராமநாதபுரம் M.P அவர்கள் பாராளுமன்றத்தில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பினர்,

 மிண்டும் அவரை 23.11.2014 அன்று கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் : M.M.S.செய்யது இபுராஹிம், செயலாளர்: பசீர் அஹமது, பொருளாளர்: ஹாஜா அனிஸ், கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மால் உபதலைவரும் மற்றும் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் கௌரவ ஆலோசகர் :S.முஹம்மது ரஃபீக் சாதிக் அவர்களும் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் திரு அன்வர் ராஜா நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

  
இதன் தொடர்ச்சியாக(03.04.2015 அன்று  கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பில் மத்திய ரயில்வே  அமைச்சருக்கும்,தென்னக ரயில்வே பொதுமேலாளர்,அவர்களுக்கும்,நமது ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப் அன்வர் ராஜா அவர்களுக்கும் கோரிக்கை மனு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த ரயில்வே திட்டம் குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் கௌரவ ஆலோசகர் ஜனாப் ,S.ரபீக் சாதிக் அவர்கள் தினமலருக்கு அளித்த பேட்டி



இதற்க்கு உறுதுணையாக  இருந்து காரைக்குடி, ராமநாதபுரம், வழி கீழக்கரை ,தூத்துக்குடி ,கன்யாகுமரி ரயில்வே புதிய இருப்புப்பாதை வழித்தடத்தையும்  வரைபடம் மற்றும் அதனுடைய செலவுகள் போன்றவைகளை.உருவாக்கிய இந்த ரயில்வே சம்பந்தமாக இன்றைய வரை அதற்காக பாடுபட்டுகொண்டிருக்கும்   நமது கீழக்கரையை சார்ந்த  ஓய்வுபெற்ற ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் M.M.S.செய்யது இபுராஹீம் காக்கா அவர்களையே சாரும்.


இது சம்பந்தமாக கீழக்கரை நகர் நல இயக்கம் மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து இந்த புதிய இருப்பு பாதை போடுவது  குறித்து பரிசீளிக்கப்பட்டுவருகிறது.

(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
(சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!) 

Thursday 2 April 2015

கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பில் குழந்தைகள் "புற்று" நோய்க்கான நிதி ..!

கீழக்கரை 02.04.2015
      மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனை  புற்றுநோய் பாதிக்க பட்ட குழந்தைகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறது. இதன் காரணமாக கமிலா குழந்தைகள் புற்றுநோய் மையம் என்று உருவாக்கி அதற்க்கு தலைவராக புற்று நோய் சிறப்பு மருத்துவர் ஜெயபோஸ் அவர்களை இயக்குனராக நியமித்து செயல்பட்டு  வருகிறது.

 
இங்கு புற்று நோய் பாதிக்கப்பட்ட குழந்தைளுக்கு இலவச மருத்துவமும் பார்க்கபடுகிறது .  புற்று நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கீழக்கரை நகர் நல இயக்கம் வருடம் தோறும் நிதி உதவி இம் மருத்துவமனைக்கு செய்துவருகிறது.என்பது குறிப்பிடத்தக்கது .



  இம் மருத்துவமனை புற்று நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு  சிகிச்சைக்காக நிதி உதவி திரட்ட வருடம் தோறும் நிகழ்சிகள் நடத்திவருகிறது.
    29.03.2015 அன்று குழந்தைகளுக்காக நிதி திரட்டுவதற்காக இன்னிசை கச்சேரி மதுரை காந்தி மீயுசியத்தில் நடைபெற்றது . இதில்  8000 மேற்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள்.



  கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பில் அதன் பொருளாளர்  ஜனாப் ஹாஜா அனீஸ் கலந்து கொண்டு மீனாக்ஷி மிஷின் மருத்துவமனையில் புற்று நோய் பாதிக்க பட்ட குழந்தைகளுக்கு மீனாக்ஷி மிசின் மருத்துவமனையின் ஸ்தாபகர் சேர்மன் திரு.சேதுராமன் அவர்களிடம் நிதியை வழங்கினார்கள்.


 நமது ராமநாதபுரம் மாவட்டத்தில் புற்றுநோய் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பில்  மீனாக்ஷி மிசின் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
          (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!)

Wednesday 1 April 2015

கீழக்கரையில் அம்மா மருத்துவ காப்பிட்டு திட்ட உயர் சிகிச்சை முகாம்.!

கீழக்கரை 01.04.2015
  கீழக்கரை  ஹுசைனியா மகாலில் இன்று நடைபெற்ற அம்மா மருத்துவ காப்பிட்டு உயர் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு உயர் மருத்துவ சிகிச்சைக்கான பரிந்துதுரை செய்யப்பட்டனர்.


     இம் முகாமில் உயர் சிகிச்சைகாண  இருதயம் மற்றும் சக்கரைவியாதி போன்றவைகளுக்கு மருத்துவர் ஜனாப்.சாதிக் அலி. MD அவர்களும் 


குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் திரு ராஜமோகன் MD, ஜனாப் ஜவாகிர் ஹுசைன் MBBS அவர்களும் .


  பெண்களுக்கான சிறப்பு மருத்துவர்கள் மருத்துவர் திருமதி ,கண்ணகி ம் MS அறுவை சிகிச்சை நிபுணர்,அவர்களும்.பெண்கள் நல மருத்துவர் திருமதி முத்தமிழ் அரசி DGO, அவர்களும்.

 
    மற்றும் கண் பரிசோதனைக்காக சிறப்பு ஏற்ப்பாடு செய்யப்பட்டு  கண்சிகிச்சை மருத்துவரும்  கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்தனர்.



 இதில் எராளமான ஆண்களும் பெண்களும் சுமார் 400 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


இதி மேல்சிகிசைக்காக (இருதயம் அறுவை) 7 பேரும், ,MRI.CT ஸ்கேன் எடுப்பதற்கு 35 நபர்களும்,பரிந்துரை செய்யப்பட்டு ராமநாதபுரம்.மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர.

(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
            (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!!)


கீழக்கரை நகரில் மூலிகை தோட்டம் அமைத்து இயற்கை விவசாயி சாதனை - வாழ்த்தலாம் வாங்க!

கீழக்கரை 30.03.2015

கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வசிக்கும்  ஜனாப்.அபுல் ஹுசைன் என்பவர்  'மாதிரி தோட்டம்' ஒன்றினை அமைத்து அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார். அதில் 25 க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளை வளர்த்து, பராமரித்து வருகிறார். தோட்டக் கலையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் துபாய், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக  பணி புரிந்து விட்டு ஊர் திரும்பிய மூன்று மாதங்களுக்குள் இதனை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


22 கோல் அளவுள்ள இவருடைய இந்த மாதிரி தோட்டத்தில் வெண்டைக்காய், வெந்தயக் கீரை, தயிர் வலை செடி, குப்பை கீரை, குப்பை மேனி கீரை, பெரண்டை, திப்பிலி, மிதுக்கம் பழம், மருதாணி, மிதி பாகற்காய், பெரிய நெல்லி, பாதாம் கொட்டை, மினி பிளான்ட், வெற்றிலைக் கொடி, ரம்பளை, நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி, ப்ளம்ஸ் தக்காளி, குச்சி மிளகாய், குண்டு மிளகாய், முடக்கத்தான் கீரை, அரைக் கீரை, வெந்தயக் கீரை, கடுகுக் கீரை, மணத் தக்காளி கீரை, கொட்டை பாக்கு, எலுமிச்சை, செவ்வந்திப்பூ, மாப்பிள்ளை மல்லி, கீழ்வா நெல்லி, பெரியா நங்கை, மலை வேம்பு, திப்பிலி, பொன்னாங்கண்ணிக் கீரை, ஓமவல்லி என்று இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 


இது குறித்து இந்த மூலிகை தோட்டத்தினை தனி மனிதனாக உருவாக்கி, சிரத்தையுடன் பராமரித்து வரும் ஜனாப்.அபுல் ஹுசைன் அவர்களிடம் கேட்ட போது, "எனக்கு சிறு வயதிலிருந்தே தோட்டக் கலையில் அளப்பரிய ஆர்வம் இருந்து வருகிறது. ஆனால் பல காலம் வெளிநாடுகளிலேயே இருந்து விட்டதால் அதற்கான தருணம் அமையவில்லை. கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் வெளி நாட்டில் இருந்து நாடு திரும்பிய பின்னர் தான் இதனை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. 


என் வீட்டின் எதிர் புறம் உள்ள எங்களுக்கு சொந்தமான தரிசு நிலத்தில் என்னுடைய பல்லாண்டு கால ஆர்வத்தை விதைத்தேன். அவைகள் இப்போது பசுமையாக காட்சி அளிக்கிறது. அனைத்து செடிகளுக்கும் நான் சொந்தமாக  தயாரிக்கும் இயற்கை மண் புழு உரங்களையே பயன்படுத்துகிறேன். இங்கு இருக்கும் 25க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் பல்வேறு நோய்களுக்கும் அருமருந்தாக இருக்கிறது. மேலும் செடிகளை பூச்சிகளிடம் இருந்து காக்க இயற்கையாக நான் தயாரிக்கும் கிருமி நாசினியை பயன்படுத்தி வருகிறேன்
.

இதில் இருந்து கிடைக்கும் பலன்களை என் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் பயன் படுத்தி வருகின்றனர். எனக்கு இது மிகுந்த மன நிறைவைத் தருகிறது. எனவே நமது ஊர் மக்கள் தரிசாக வைத்திருக்கும் நிலங்களை நல்ல பலனுள்ள மரம், செடி, கொடிகளை நட்டு வளர்த்து என்னை போலவே பேரின்பம் அடைய வேண்டுமென அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்." என்று  மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 


கீழக்கரையை பொறுத்தமட்டில் கடும் நெருக்கமான வீடுகளிக்கிடையே வாழும் நம் மக்களுக்கு மரம் செடிகள் வளர்ப்பது என்பது கானல் நீராகவே இருக்கிறது. ஊருக்குள்ளும் பள்ளிவாசல்களின் மைய வாடிகளை தவிர வேறெங்கும் பசுமைகளை காண முடியாது. இப்படி இருக்கும் போது, தூய காற்றையும், பசுமையான சூழலையும், நல்ல தண்ணீரையும் தேடி கிழக்கில் பெரிய காடு பகுதியிலும், மேற்கில் 500 பிளாட்டு பகுதியிலும் குடியேறும் நம் மக்களுக்கு இது போன்ற முயற்சிகள் நல்ல ஊக்குவிப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.



தோட்டக் கலை ஆர்வம் உள்ளவர்கள் ஜனாப்.அபுல் ஹுசைன் அவர்களை 
9952806012 என்கிற அவரது அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.