தேடல்

Thursday 5 March 2015

கீழக்கரையில் தாலுகா அலுவலகம் செயல்பட தமிழக அரசு அரசானை வெளியீடு ..!

கீழக்கரை 06.03.2015

கீழக்கரையை தனிதாலுகவாக அறிவிக்க கடந்த அரசிடம் மறைந்த செ .மு .ஹமீது அப்துல் காதர் ,அவர்களும் மற்றும் ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் M.M.S .செய்யது இபுராஹீம் ஆகியோரின் முயற்சியால் கடந்த அரசின் முதல் அமைச்சரிடம் மனு அளித்து அது பரிசீலித்து சட்டமன்றதில் அறிவிப்பு வெளியிட்டது.







இந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டு பின்னர் அனைத்து  சமுதாய சமுக நல அமைப்புகளும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து  ஜமாஅத் அமைப்புகள் போராடி தற்போதைய அரசிடம் முறையிட்டது .இதற்கேற்ப இந்த அரசு கடந்த வருடம் 110 விதியின் கீழ் சட்டமன்றதில் அறிவிப்பு வெளியிட்டது. 

தற்போது நமது நகராட்சி தலைவி ஜனாப ராவியதுல் கதரியா இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை சென்று தமிழக முதலமைச்சரையும் மற்றும்  வருவாய்துரை அமைச்சரையும் ,வருவாய்துறை திட்ட இயக்குனர் திரு.அருண் ராய் அவர்களையும் சந்தித்து கீழக்கரையில் தாலுகா இயங்க உடனே அரசுஆனை பிறப்பிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதன் அடிப்படையில் இன்று 06/03/2015. அரசு ஆணை வெளியிட்டது. 


இந்த ஆணைகினங்க மாவட்ட ஆட்சியர் எப்போது கீழக்கரை தாலுகா அலுவலகம் செயல்படும் என்று அறிவிப்பு வெளியானதுடன் நகராட்சி அலுவலக மாடியில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது . அதன் பணிகள் முடிவடைவதற்கு  முன்பு தற்காலிகமாக தாலுகா அலுவலகம் செயல்படும் என்று தெரிகிறது. இந்த அறிவிப்பு குறித்து கீழக்கரை நகர்மன்ற உறுப்பினர் M.U.V.முஹைதீன் இபுராஹீம் கூறுகையில் இதற்காக உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் கீழக்கரை நகர் மன்ற தலைவி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துகொண்டார்.

(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
            
(செய்தி உதவி: 18 வார்டு நகர் மன்ற உறுப்பனர் ஜனாப் M.U.V. முஹைதீன் இபுராஹீம். படங்கள்: கீழக்கரைடைம்ஸ்) 

1 comment:

  1. தற்காலிய அலுவலகம் செயல் பட இருக்கிறது?

    ReplyDelete


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.