தேடல்

Thursday 12 March 2015

கடவு சீட்டு விண்ணபிக்க மாணவர்கள் ஒரிஜினல் சான்றிதழ் சமர்பிக்க தேவையில்லை .

கீழக்கரை:13.03.2015
         நாம் கடவுசீட்டு (பாஸ்போர்ட்)விண்ணபிக்க ஏகப்பட்ட கெடுபிடிகள் இருப்பதுண்டு அதை மிக எளிமை ஆக்கி இருக்கின்றது வெளி விவகாரத்துறை
.இது குறித்து சென்னை மண்டல கடவுசீட்டு (பாஸ்போர்ட்) அதிகாரி கே .பாலமுருகன்.வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் .
    கடவுசீட்டு விண்ணபிக்க மாணவர்கள் தங்களுடய பிறப்பு சான்றிதழ் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கல்வி தாஸ்தாவேஜிகளை பள்ளிக்கூடங்களில் கொடுத்திருப்பார்கள். இதனால் கடவுசீட்டு விண்ணப்பிக்கும்போது அவர்களால் இதை சமர்பிக்கமுடிவதில்லை.இனி அது தேவைஇல்லை.
       ஒரிஜினல் இல்லாத பட்சத்தில் மானவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் அந்த மாணவர்கள் தங்கள் பள்ளியில் படிபதையும் அவர்களுடைய ஒரிஜினல் கல்வி சான்றிதழ் தங்கள் பள்ளியில் இருப்பதையும் தெரிவித்து ஒரு சான்றிதழ் தாக்கல் செய்யவேண்டும். மேலும் கல்வி சான்றிதழின் நகலையும் கல்வி நிறுவனத்தின் அடையாள அட்டை நகலையும் இணைத்து மாணவர்கள் சமர்பித்தால் போதுமானது.
      அதுமட்டுமல்லாமல் தற்போதைய நடைமுறைப்படி கடவுசீட்டு விண்ணப்பிக்க அனுப்பும் போது முகவரி அத்தட்சிக்காக வங்கி பாஸ்புக்  ,வங்கி கணக்கு தற்போதைய பக்கம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது . பொது தனியார் வங்கிகள் ,பிராந்திய கிராமவங்கிகள் ,மற்றும் எந்தெந்த வங்கிகள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதை (www.passportindia.gov.in) பார்வையிடலாம்.இதுமட்டுமல்லாமல் கட்டணமில்லா தொலைபேசி 1800 258 1800 என்ற என்னில்  17 மொழிகளில் 24 மணிநேரமும் தேசிய கால் சென்டரில் தகவல் பெற்றுகொள்ளலாம்  என்று அவர்  கூறினார்.
(செய்தி_தினத்தந்தி)

  (என்றும் மக்கள் நலப்பனியில் கீழக்கரை நகர் நல இயக்கம்)
          (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ...)

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.