தேடல்

Sunday 5 April 2015

கீழக்கரையில் சுகாதாரமான குடிநீரா..? நகராட்சி ஆய்வு மேற்கொள்ளவேண்டும்,மக்கள் கோரிக்கை ..!!

கீழக்கரை.05.04.2015
        இராமநாதபுரம் மாவட்டத்தை தண்ணீர் இல்லா காடு என பல்லாண்டு காலமாக பலர் பேச்சு வழக்கில் கூறுவதை பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் நமதூர் தனவந்தர்களும், செல்வந்தர்களும், கொடைவள்ளல்களும் , வாழும் சிறப்பான கீர்த்திமிகு கீழக்கரையில் ....?

         இவ்வளவு பெயருக்கும் சொந்தக்காரர்களான நாம் இன்னும் தண்ணீரை காசுகொடுத்துத்தான் வாங்கவேண்டிய அவல நிலை. இருந்தும் நாம் குடிப்பது சுகாதாரமான குடிநீரா..?


இது குறித்து கீழக்கரை சமுக ஆர்வலரும் சமுக சேவையில் அக்கறை உள்ளவருமான ஜனாப் அல்லாபக்ஸ்.அவர்கள் கூறும் போது

நம் கீழக்கரை நகரத்தில் ஆண்டாண்டு காலமாக  முதன்முதலாக கடைகளில்தான் தகர டப்பாக்களில் ( துருபிடித்த) தண்ணீர் ஊற்றுவார்கள். அந்த டப்பாவிலே. நாம் என்றாவது இது ஏன் இப்படி இருக்கிறது என்று கேட்டிருப்போமா அல்லது நகராட்சி தான் கேட்டிருக்குமா ?

   தற்போது தண்ணீர் விநியோகம் செய்யும் மாட்டுவண்டிகள் ,தண்ணீர் டேங்கர் லாரிகள்,குட்டியானை பிளாஸ்டிக் கேன்கள், இவை யாவும் முறையாக பராமரிக்கப்பட்டு நமது "கீழக்கரை நகராட்சி அனுமதியோடுதான்" விநியோகம் செய்கிறார்களா.


 இல்லை அனுமதி இல்லாமலும், சுத்தம் இல்லாமலும்,விற்பனைசெய்யபடுகிறதா. இதை நகராட்சி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதா. மாதம் ஒருமுறை  தண்ணீர் விற்பனை செய்யும் டேங்கர் லாரிகளை குளோரினால் சுத்தம் செய்து சுகாதார அதிகாரிகளிடம் தகுதி சான்று பெறவேண்டும்.


  ஆனால் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல்  தண்ணீர் டேங்கர் லாரிகள்,மாட்டுவண்டிகள்,பல வருடங்களாக சுத்தம் செய்யாமல் அப்படியே மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்கிறார்கள்.சுகாதாரமற்ற குடிநீரை அருந்துவதால் மக்கள் பல இன்னல்களுக்கு ,கிருமி காய்ச்சல்.நிமோனியா,டைபாய்டு,காலரா ,போன்ற பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.


இதை முறையாக பராமரிக்க கீழக்கரை நகராட்சி அதிரடியாக கீழக்கரையில்  தண்ணீர் விற்பனை செய்யும் தண்ணீர் டேங்கர் லாரிகள்,மாட்டு வண்டிகள்,குட்டியானை பிளாஸ்டிக் கேன்கள்.மற்றும் மினரல் வாட்டர் கேன்கள்.  போன்றவைகளை அதிரடியாக சோதனை செய்து தவறு செய்தவர்களை தண்டிக்கவேண்டும்.
  கீழக்கரை நமதூர் மக்கள் சுகாதாரமான குடிநீரை குடிக்க கீழக்கரை நகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

(என்றும் மக்கள் நலப்பணியில் கீழக்கரை நகர் நல இயக்கம் )
            (சுத்தம் சுகாதாரம் நித்தம் பேணுக ..!)

No comments:

Post a Comment


கருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :

1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.


3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.